Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - ஒரு புள்ளியில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மனு பாக்கர்.. ரமிதா தோல்வி

பாரிஸ் : 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் 3வது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். நேற்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் கணக்கை தொடங்கினார்.

இந்த நிலையில், இன்று 3வது நாள் ஆட்டத்தில், துப்பாக்கிச் சுடுதல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிந்தல் பைனலில் களமிறங்கினார். இதில் ரமிதா ஜிந்தால், தொடர்ந்து 10 புள்ளிகளை குவித்து வந்தாலும், மற்ற வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு, அவரை முந்தினர்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

இதனால், 20 வயதான ரமிதா 145. 3 புள்ளிகள் பெற்று, 7வது இடத்தில் நிறைவு செய்து, பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் பதக்கத்திற்கான போட்டியில் மனு பாக்கர், சரபோஜித் குழு தகுதி. வெறும் 1 புள்ளிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வெல்வதற்கான போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பு பறிப்போனது.இதனையடுத்து மீண்டும் வெண்கலம் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மற்றொரு இந்திய ஜோடியான ரிதம் சங்வான், அர்ஜூன் சீமா ஜோடி 10வது இடத்தை மட்டுமே பிடித்தனர். பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் லீக் சுற்றின் 2வது ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி போன்னப்பா, தனிஷா ஜோடி தோல்வியை தழுவியது. தற்போது வரை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரு வெண்கலத்துடன் 22வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியா தலா 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியா 4 தங்கம், 2 வெள்ளியுடன் 3வது இடத்தையும், அமெரிக்கா 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 4வது இடத்திலும் உள்ளது.

Story first published: Monday, July 29, 2024, 14:21 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+