Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது? ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தோனி தங்கம் வென்றாரா? ஓவரா போறீங்க பா! இந்த வீடியோவை பாருங்க!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் தோனியை சுற்றி தான் இயங்குகிறது என்று கூறும் அந்த நெட்டிசன்கள் தற்போது ஒரு படி மேல் போய் இந்தியாவுக்காக தோனி ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்திருக்கிறார் என்று ஒரு வீடியோவை போட்டு வருகின்றனர்.

இதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகின்றது. இந்தியா இம்முறை ஒரு தங்க பதக்கத்தை கூட வாங்கவில்லை. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கத்தை வென்றார்.

olympics 2024 neeraj chopra arshad nadeem 2024


இந்த நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது என சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் தோனி ஓடிவந்து ஈட்டியை எரிந்து தங்க பதக்கத்தை வெல்வது போல் நெட்டிசன்கள் எடிட் செய்திருக்கிறார்கள். அதாவது அர்ஷத் நதீம் ஓடிவந்து ஈட்டியை எறிந்ததை தோனி எரிந்தது போல் மார்பிங் செய்து எடிட் செய்து இருக்கிறார்கள்.

இதை போட்டுவிட்டு தோணி இந்தியாவுக்காக தங்க பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இது முற்றிலும் பொய் என எனத் தெரிந்தும் நம்ம ஊரில் தோனி அதை செய்தார் இதை செய்தார் அஜித் வீடு கட்டி கொடுத்தார் என்று எந்த செய்தி வந்தாலும் அதை அப்படியே நம்பி வாட்ஸ் அப்பில் பரப்பும் நபர்கள் இதையும் பரப்பி வருகிறார்கள்.


கொஞ்சம் யோசித்தால் கூட இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.எனினும் இது காமெடிக்காக தான் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த காமெடியை கூட புரிந்து கொள்ளாமல் பலரும் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். மற்ற விளையாட்டுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது தோனி வைத்து செய்யப்பட்ட எடிட் அந்த குற்றச்சாட்டை உண்மையாக மாற்றுகிறது.

Story first published: Saturday, August 10, 2024, 7:03 [IST]
Other articles published on Aug 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+