ஒலிம்பிக்- போல் வால்ட் : பட கூடாத இடம் பட்டதால் பதக்கத்தை இழந்த பிரெஞ்ச் வீரர் - வீடியோ
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் போல் வால்ட் எனப்படும் குச்சியை வைத்து உயரம் தாண்டுதல் பிரிவில் பிரெஞ்சு வீரர் ஆண்டனி அம்மிராட்டிக்கு ஒரு சோகம் ஏற்பட்டது. தன்னுடைய மர்ம உறுப்பு காரணமாக அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருப்பதாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் குச்சியை வைத்து உயரம் தாண்டுதல் பிரிவில் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆண்டனி அமிராட்டி கலந்து கொண்டார். இதில் முதலில் அமிரட்டி 5 புள்ளி நான்கு பூஜ்ஜியம் மீட்டர் உயரத்தை தாண்டினார்.

அதன் பிறகு ஐந்து புள்ளி ஆறு பூஜ்ஜியம் என்ற உயரத்தையும் வெற்றிகரமாக தாண்டினார். ஆனால் ஐந்து புள்ளி ஏழு பூஜ்ஜியம் மீட்டர் உயரத்தை தாண்டும் போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. தன்னுடைய மூன்றாவது முயற்சியில் 5.70 மீட்டர் உயரத்தை குச்சியை வைத்து தாண்டும்போது அவருடைய மர்ம உறுப்பு பார் குச்சியை இடித்து விட்டது.
இதனால் குச்சியும் கீழே விழுந்தது. இதன் காரணமாக அவர் 5.70 மீட்டர் உயரத்தை தாண்டவில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் இதனை நேரலையில் பார்த்த வர்ணனையாளர்கள் இதை எப்படி விவரிப்பது என்று தெரியாமல் வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தனர். மேலும் தன்னுடைய மர்ம உறுப்பே, தமது பதக்கம் வெல்லும் வாய்ப்பை பதம் பார்த்துவிட்டது என்ற சோகத்தில் பிரான்ஸ் வீரர் அந்தோணி இருந்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. யாருக்கும் இந்த நிலை வந்து விடக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .பிரான்ஸ் வீரருக்கு இப்படி நடந்து இருக்க கூடாது என்றும், இதை அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ் இதுவரை 12 தங்கம், 14 வெள்ளி பதினாறு வெண்கலம் என 42 பதக்கங்களை வென்று பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியா மூன்று வெண்கல பதக்கத்தை வென்று 54வது இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியா ஒரு தங்கத்தை மட்டும் வென்றால் தற்போது இருபத்தி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications