Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன? என்ன டயட் ஃபாலோ செய்கிறார் தெரியுமா?

மும்பை: ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீண்டும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் தொடரில் 2 முறை பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

அதிலும் ஈட்டி எறிதல் போன்ற உடல் உழைப்பு அதிகம் தேவையாக இருக்கும் விளையாட்டில் ஃபிட்னஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் ஒலிம்பிக் தொடரின் போது நீரஜ் சோப்ராவின் ஃபிட்னஸ் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவரின் எடை 86 கிலோ இருக்கும் நிலையில், அவரின் டயட் குறித்த விவரங்கள் பலராலும் தேடப்பட்டது.

Olympics 2024 Paris Olympics 2024 Neeraj Chopra 2024 2024

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் டயர் விவரம் தெரிய வந்துள்ளது. அவர் காலை உணவாக பழங்கள், தயிர், ஓட்ஸ், முட்டையின் வெள்ளைக்கரு, பிரட் மற்றும் இளநீர் ஆகியவை சாப்பிடுவதாக தெரிய வந்துள்ளது. இதன் கொழுப்பு அளவு வெறும் 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அதேபோல் மதிய உணவாக தயிர், சோறு, பருப்பு வகைகள், கிலில்ட் சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பயிற்சியின் போது வாழைப் பழம், ஜூஸ் ஆகியவை மட்டுமே முதன்மையாக சாப்பிடுகிறார். இரவு உணவில் கார்போஹைடிரேட்ஸ் மொத்தமாக தவிர்த்துவிடுகிறார். அதற்கு பதிலாக பால், பேரிச்சம்பழம், ஜாங்கிரி, ப்ரோட்டின்ஸ் இருக்கும் உணவு வகைகளை மட்டுமே எடுத்து கொள்கிறார். 2016ஆம் ஆண்டு வரை நீரஜ் சோப்ரா சைவமாக இருந்து வந்திருக்கிறார்.

அதன்பின் அமெரிக்காவில் பயிற்சிக்கு சென்ற போது மீன் வகைகளை சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக சால மீனை சாப்பிட அறிவுறுத்தியுள்ளனர். இதன்பின்னரே நீரஜ் சோப்ரா அசைவ உணவுகளை சாப்பிட தொடங்கியுள்ளார். அதேபோல் நீரஜ் சோப்ராவுக்கு டயட்-க்கு இடையில் சீட் மீல் என்பதே கூடாது என்பதில் தீவிரமாகி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 16, 2024, 20:23 [IST]
Other articles published on Aug 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+