Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீரஜ் சோப்ராவையே ஓரம்கட்டிட்டாரே.. கிரிக்கெட் டூ ஈட்டி எறிதல் பயணம்.. யார் இந்த அர்ஷத் நதீம்?

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் இந்திய ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்தப் போட்டியில் 90 மீட்டர் தூரத்திற்கு மேல் 2 முறை வீசி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அர்ஷத் நதீம். 2வது வாய்ப்பில் 92.97 மீட்டர் தூரம் வீசிய அவர், தங்கப் பதக்கம் உறுதியான பின் கடைசி முயற்சியில் 91.79 மீட்டர் தூரம் வீசி ஆச்சரியத்தை அளித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து தனி நபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனை அர்ஷத் நதீம் படைத்திருக்கிறார்.

Olympics 2024 Paris Olympics 2024 Arshad Nadeem 2024 2024

கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பின் தனிநபர் பிரிவில் பாகிஸ்தான் தரப்பில் பதக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு பிறந்த அர்ஷத் நதீம், தெற்கு பஞ்சாப் பகுதியில் உள்ள மியான் சன்னுவில் பிறந்தவர். கட்டட தொழிலாளியான முகமது அஷ்ரப்பிற்கு பிறந்த 7 குழந்தைகளில் 3வது குழந்தை தான் அர்ஷத் நதீம். பெரிய பொருளாதார சூழலில் வளராத அர்ஷத் நதீமின் முதல் கனவு பலரையும் போல் கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்பது தான்.

ஆனால் குடும்ப சூழல் காரணமாக அந்த ஆசையை கைவிட்டவர். கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து, பேட்மிண்டன், தடகளம் என்று பல்வேறு விளையாட்டுகளிலும் திறமை வாய்ந்தவர் அர்ஷத் நதீம். ஒருமுறை விளையாட்டுப் பிரிவு நிர்வாகியான ரஷீத் அஹ்மத் சாகி என்பவரின் கண்களில் அர்ஷத் நதீம் பட்ட போது, அவர் ஈட்டி எறிதலில் கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். அவரின் ஆலோசனையின் பேரில் அர்ஷத் நதீமும் ஈட்டி எறிதல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அர்ஷத்தின் புகழ் உள்ளூர் விளையாட்டு குழுவில் இருந்த பலருக்கும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ராணுவம், ஏர் ஃபோர்ஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் அர்ஷத்தை அழைக்க தொடங்கியுள்ளனர். இதனால் உற்சாகமான அவரின் தந்தை முகமது அஷ்ரப், அர்ஷத் நதீமை ஈட்டி எறிதலில் பயணிக்க உற்சாகப்படுத்தியுள்ளார்.

அதன்பின் 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவிலான போட்டிகளில் அர்ஷத் நதீம் பங்கேற்க தொடங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த தெற்கு ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற அவர், ஜூனியர் தடகள போட்டிகளிலும் வெண்கலம் வென்றுள்ளார். 2018ஆம் ஆண்டில் அர்ஷத் நதீமின் திறமை 80 மீட்டருக்கு மேல் வீசும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்பின் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை மெருகேற்றி கொண்டே வந்துள்ளார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அர்ஷத் நதீம், 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி வென்று ஆச்சரியம் கொடுத்தார். கடந்த ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்ல முடியாமல் தவித்த நிலையில், இம்முறை தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

Story first published: Friday, August 9, 2024, 7:31 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+