Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கப் பதக்க கனவுடன் வினேஷ் போகத்.. எதிர்த்து நிற்கும் அமெரிக்க வீராங்கனை.. யார் இந்த சாரா?

பாரிஸ்: மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் வினேஷ் போகத்தை எதிர்த்து விளையாடவுள்ள அமெரிக்கா வீராங்கனை சாரா குறித்து சில ஆச்சரியமான சாதனைகளையும் காணலாம்.

ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிட்டாலும், தங்கப்பதக்கம் வென்று இந்திய தேசிய கீதத்தை ஒலிம்பிக்கில் ஒலிக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று உச்சத்திற்கு செல்லட்டும் என்று அவரது சகாக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Olympics 2024 Paris Olympics 2024 Vinesh Phogat 2024 2024

இந்த நிலையில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்ட்பிராண்டை எதிர்கொள்ளவுள்ளார். இவர் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பதால், அவ்வளவு எளிதாக வினேஷ் போகத்தால் வெற்றிபெற முடியாது என்று பார்க்கப்படுகிறது. இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் மங்கோலிய வீராம்ங்கனை டோல்கோர்ஜவை எதிர்கொண்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.

அமெரிக்கா வீராங்கனை சாரா இதுவரை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லவில்லை என்றாலும், 50 கிலோ, 53 கிலோ மற்றும் 55 கிலோ எடைப்பிரிவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி 7 முறை ஆசிய சாம்பியன்ஷுப் போட்டிகளில் வென்றுள்ளார். அதேபோல் உலக சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்றவர். கடந்த ஆண்டு செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 50 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய அவர், வெண்கலம் வென்றதோடு ஒலிம்பிக் தொடரில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டிருப்பதால், வினேஷ் போகத் வெற்றி எளிதாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் ஒலிம்பிக் சாம்பியன் உட்பட அனைவரையும் அபாரமாக வீழ்த்தி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பதால், வினேஷ் போகத்தை வீழ்த்துவதும் அவ்வளவு எளிதாக இருக்காது என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, August 7, 2024, 12:20 [IST]
Other articles published on Aug 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+