Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் 2024 -இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்தது! மல்யுத்தத்தில் 21 வயதான அமர் செராவத் வெண்கலம்

Aman Sehrawat : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் அமன் செரவாத் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டேரியின் குருசை எதிர்கொண்ட அமன் சராவத் ஆரம்பம் முதலில் ஆக்ரோஷமாக விளையாடி அதிர்ச்சி அளித்தார். அமன் சரவாத் போட்ட ஒவ்வொரு பிடியையும் எதிர்கொள்ள முடியாமல் குரூஸ் தடுமாறினார்.

Olympics 2024 boxing aman sehrawat 2024 2024

இதனால் அமன் சராவாத்திற்கு புள்ளிகள் எகிறி சென்றது .இதை அடுத்து குரூஸ் கடுமையாக போராடி மீண்டும் புள்ளிகளை பெற முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அமம் சராவத் போட்டியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இறுதியில் 13 க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் அமன் சரவாத் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.

21 வயதான அமன் சரவாத் தன்னுடைய இளம் வயதிலேயே பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியா தனது ஆறாவது பதக்கத்தை தட்டிச் சென்று இருக்கிறது.அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக் வரலாற்றில் இளம் வயதில் பதக்கம் வென்ற பிவி சிந்துவின் சாதனையை அமன் முறியடித்து இருக்கிறார்.

இதனிடையே மகளிருக்கான ரிலே ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இதில் தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், வித்யா ராமராஜ் அடங்கிய அணி முதல் சுற்றில் பங்கேற்றது. இதில் மகளிர் அணிகள் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களால் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் தொடர்ந்து வெளியேறினர்.

Story first published: Friday, August 9, 2024, 23:44 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+