Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 155ஆக உயர்வு!

டோக்கியோ: ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் ஜப்பானில் 5,020 கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளது. ஜப்பானில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் 38,441 ஆக உள்ளது. டோக்கியோவில் தினசரி பதிவாகும் கேஸ்கள் 1500ஐ தாண்டி உள்ளது.

Olympics: 7 More new Covid 19 Cases found at Tokyo 2020 today

இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒலிம்பிக் கிராமத்தில் 16 கேஸ்கள் பதிவானது. இந்த நிலையில் இன்று 7 பேருக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது.

ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஒலிம்பிக் வீரர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். டச் டென்னிஸ் வீரர் ஜூலியன் ரோஜருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஒலிம்பிக் 2020 தொடரில் அமெரிக்கா, சிலி, செக் குடியரசு, சிலி, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டச் ஆகிய நாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர் குழுவினர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

Story first published: Tuesday, July 27, 2021, 9:19 [IST]
Other articles published on Jul 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+