Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்க்கில் உட்கார்ந்து மது அருந்திய தடகள வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் சர்ச்சை தொடங்கியது விசாரணை

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் 2020ல் தடகள வீரர்கள் சிலர் மது அருந்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2020 ஒலிம்பிக் தொடர் கொரோனா பரவலுக்கு இடையே நடந்து வருகிறது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் நடக்க வேண்டிய போட்டிகள் கொரோனா காரணமாக இது வருடம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வருடம் ரசிகர்கள் இன்றி மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் ஒலிம்பிக் நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை 260க்கும் அதிகமானோர் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காண்டம்

காண்டம்

இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக டோக்கியோவில் ஒலிம்பிக் ஆட வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு காண்டம் அளிக்கப்படவில்லை. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து காண்டம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால், வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த காண்டம் வழங்கப்படவில்லை. .

மது

மது

அதே சமயம் வீரர்கள் வெளியே பாரில் மது குடிப்பதை தடுக்கும் வகையில் டோக்கியோவில் ஒலிம்பிக் நடக்கும் ஒலிம்பிக் வில்லேஜுக்குள் மது குடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வீரர்கள், வீராங்கனைகள் மது பாட்டிலை வெளியே வாங்கி, உள்ளே தங்கள் அறைக்கு கொண்டு சென்று குடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

வெளியே

வெளியே

இது தவறான முன்னுதாரணமாகும் என்று பலர் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் மது விற்பதும், குடிப்பதும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் கட்டுப்பாடுகளை மீறி சில வீரர், வீராங்கனைகள் டோக்கியோ கிராமத்தில் உள்ள பார்க் ஒன்றில் மது அருந்தியதாக புகார் எழுந்துள்ளது.

விசாரணை

விசாரணை

ஒலிம்பிக் 2020 டோக்கியோ கமிட்டி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ கிராமத்தில் உள்ள பார்க் ஒன்றில் இவர்கள் மது அருந்தும் போது பிடிக்கப்பட்டனர். ஒலிம்பிக் கமிட்டியினர் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, August 1, 2021, 14:15 [IST]
Other articles published on Aug 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+