Vinesh Phogat எடை குறைக்க ரத்தம் எடுத்தும் பயனில்லை!இடிந்து போய் அமர்ந்திருக்கும் வினேஷ் புகைப்படம்
பாரஸ் : ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று இன்று தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது எடை 100 கிராம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருப்பதாக கூறி அவரை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தகுதி நீக்கம் செய்திருக்கிறது.
இந்த நிலையில் வினேஷ் போகட் விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது நேற்றைய முதல் சுற்று ஆட்டத்திற்கு முன்பு ஒரு முறை எடை போடப்பட்டு இருக்கிறது.

அதில் வினேஷ் போகட், 49 கிலோ 900 கிராம் எடை இருந்திருக்கிறார். அன்று எட்டு மணி நேர இடைவெளியில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. இதில் வினேஷ் போகட் ஒரு அளவுக்கு தான் தண்ணீர் மற்றும் உணவை எடுத்துக் கொண்டிருக்கிறார். அரையிறுதியில் வினேஷ் போகட் வெற்றி பெற்ற பிறகு அவருடைய எடை 52 கிலோவாக உயர்ந்து இருந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய குழுவினர் காலையில் மீண்டும் எடை பார்ப்பதற்குள் இரண்டு கிலோவை குறைக்க வேண்டும் என பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக வினேஷ் போகட் தண்ணீரை குடிக்காமல் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து இருக்கிறார். அதன் பிறகு ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் சைக்கிளிங், ஜாக்கிங் என செய்து இருக்கிறார்.

அப்போதும் உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இதன் பிறகு நீராவி குளியல் செய்து தன்னுடைய தண்ணீர் சத்தை வினேஷ் போகட் குறைக்க முயற்சி எடுத்து இருக்கிறார். அப்போதும் 50 கிலோ வரவில்லை என்பதால் உச்சகட்டமாக தன்னுடைய உடலில் இருக்கும் ரத்தத்தை மருத்துவர்கள் உதவியுடன் வினேஷ் போகட் சிலேன் மூலம் எடுத்து இருக்கிறார்.
மேலும் உடல் எடை கொஞ்சமாவது குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக தலை முடியையும் வினேஷ் போகத் நறுக்கியிருக்கிறார். இவ்வளவு செய்தும் வினேஷ் போகத்தின் உடல் எடை 52 கிலோவில் இருந்து 50 கிலோ 100 கிராம் வரை நான் குறைந்து இருக்கிறது. இதனால் 100 கிராம் இடை அதிகமாக இருந்ததால் தினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இரவு முழுவதும் தூங்காமல் இவ்வளவு செய்தும் எடை குறையவில்லை என இடிந்து போய் வினேஷ் போகட் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உடல்நிலை மோசமாக மாறியதால் தான் வினேஷ் போகட் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications