2011 உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் சான்ஸ்!
மும்பை: கடந்த உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்ற நான்கு வீரர்கள் மட்டுமே 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
2011ம் ஆண்டு இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்திய உலக கோப்பையை இந்தியா அபாரமாக வென்று சாம்பியனாகியது. அந்த அணிக்கு டோணி தலைமை வகித்தார். வீரேந்திரசேவாக், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், கவுதம் கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா, அஸ்வின், பியூஸ் சாவ்லா, முனாப் பட்டேல் ஆகியோர் அப்போதைய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களாகும்.

இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில், கடந்த உலக கோப்பையில் இடம்பெற்ற வீரர்களில் வெறும் நான்குபேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
கடந்த உலக கோப்பையிலும், நடப்பு கோப்பையிலும் விளையாட உள்ள இந்திய வீரர்கள் யார், யார் தெரியுமா? டோணி, கோஹ்லி, ரெய்னா, அஸ்வின் ஆகியோர் மட்டுமேயாகும்.
நடப்பு சாம்பியனான இந்திய அணியில், அந்த சாம்பியன் பட்டத்தை பெற உழைத்த வீரர்கள் அதிகம்பேருக்கு இடம் கிடைக்காதது துரதிருஷ்டமே.


Click it and Unblock the Notifications