For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராம்ப் வாக், ஆடல், பாடல்: மரகானா ஸ்டேடியம் அதிர அதிர குட்பை சொல்லும் ரியோ ஒலிம்பிக்!

By Siva

ரியோடி ஜெனீரோ: ரியோ ஜெனீரோவில் இன்று நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு விழாவை காண 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் துவங்கியது. 17 நாட்களாக நடந்து வரும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Over 41,000 tickets sold for Rio Olympics closing ceremony

* நிறைவு விழா இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு துவங்கும்.

* நிறை விழா நிகழ்ச்சிகளில் 3 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 200 நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் லியோனார்டோ கேடானோ தெரிவித்துள்ளார்.

* நிறைவு விழா மரகானா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அந்த ஸ்டேடியத்தில் 78 ஆயிரத்து 838 பேர் அமரலாம்.

* இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மரியோ அன்ட்ரடா கூறுகையில், நிறைவு விழாவுக்கான டிக்கெட்டுகளில் இதுவரை 41 ஆயிரத்து 233 விற்பனையாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

* பிரேசிலை சேர்ந்த சூப்பர் மாடலான ஜிசல் பன்ட்சென் ராம்வாக் செய்ய உள்ளார். ஜிசலின் நிகழ்ச்சி குறித்த அறிந்த ரசிகர்கள் உடனே இது பற்றி அதிக அளவில் கூகுள் செய்துள்ளனர்.

* பிரேசிலை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்தாட்ட வீரரான பீலே நிறைவு விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, August 22, 2016, 9:52 [IST]
Other articles published on Aug 22, 2016
English summary
More than 41,000 tickets have been sold for the closing ceremony of the 2016 Olympic Games, spokesman for the Rio 2016 organising committee Mario Andrada has said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X