உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி-பாக்., நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு

15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் முகம்மது யூசுப் சேர்க்கப்படவில்லை. முன்னாள் கேப்டனான முகம்மது யூசுப், 90 டெஸ்ட் மற்றும் 288 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர் ஆசாத் ஷபீக், யூசுப்புக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் தேசிய ஒரு நாள் சாம்பியன்ஷிப் போட்டியில் லாகூர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஆவார்.
மேலும் தற்போது நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து
வீரர்களும் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும் கேப்டன் யார் என்பதை பாகிஸ்தான் தேர்வுக் குழு அறிவிக்கவில்லை. ஆனால் டெஸ்ட் கேப்டனான மிஸ்பா உல் ஹக்கே, உலகக் கோப்பைப் போட்டிக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணி: முகம்மது ஹபீஸ், அகமது சேஷாத், யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், ஆசாத் ஷபீக், கம்ரான் அக்மல், ஷாஹித் அப்ரிதி, அப்துல் ரஸ்ஸாக், அப்துல் ரஹ்மான், சயீத் அஜ்மல், சோயப் அக்தர், உமர் கல், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர்.
நியூசிலாந்து அணியில் ஹவ்ச
இதற்கிடையே, நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியகரமான சேர்ப்பு ஹவ் மட்டு்மே. 2வது விக்கெட் கீப்பராக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஜேக்கப் ஓரம் திரும்பி வருகிறார். கேப்டனாக வெட்டோரியே அறிவிக்கப்பட்டுள்ளார். ராஸ் டெய்லர் துணைக் கேப்டனாக செயல்படுவார்.
நியூசிலாந்து அணி: டேணியல் வெட்டோரி, ராஸ் டெய்லர், பிரன்டன் மெக்கல்லம், ஜெஸ்ஸி ரைடர், மார்டின் குப்தில், நாதன் மெக்கல்லம், ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேமி ஹவ், லியூக் உட்காக், கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் பிராங்க்ளின், டிம் செளதி, கைல் மில்ஸ், ஹமீஷ் பென்னட்.
இதுவரை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்களது உலகக் கோப்பைப் போட்டிக்கான அணிகளை அறிவித்துள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications