
186 நாடுகள்
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் உலகம் முழுவதும் 186 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. இதில் 1736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் இருந்தது.

பாகிஸ்தான் விலகல்
ஆனால், சர்வதேச செஸ் சம்மேளனம் பாகிஸ்தானை கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததை அடுத்து, தங்களது வீரர்களை அந்நாட்டு அரசு அனுப்ப திட்டமிட்டு இருந்தது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் இறங்கினர். இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரச்சினை என்ன?
அதற்கு பாகிஸ்தான் சொன்ன காரணம், மத்திய அரசை மேலும் எரிச்சல் அடைய செய்துள்ளது. அதாவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் இந்தியா, அதன் ஜோதி ஓட்ட நிகழ்ச்சியை நாடு முழுவதும் நடத்தியது. இதில் காஷ்மீரிலும் செஸ் ஜோதி ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் தன் விலகலுக்கு இதுவே ஒரு காரணம்க கூறியுள்ளது.

கிரிக்கெட்டை தொடர்ந்து செஸ்
சர்ச்சைக்குள்ளான காஷ்மீர் பகுதியில் விளையாட்டு தொடர்பாக நிகழ்ச்சியை நடத்தி இந்தியா அரசியல் செய்வதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகுவாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து சீனா, ரஷ்யா விலகியுள்ள நிலையில், அந்த பட்டியலில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. ஐபிஎல், கிரிக்கெட் தொடர், ஹாக்கியை தொடர்ந்த செஸ் போட்டியிலும் இந்தியா வர பாகிஸ்தான் மறுத்துள்ளது,


Click it and Unblock the Notifications











