ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் பங்கஜ்!

பில்லியர்ட்ஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.
சீனாவின் குவாங்ஸு நகரில் 16-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் பிரிவில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
அவர், மியான்மரின் நோதவாயை 3-2 என்ற கணக்கில் வென்றார்.
பி பிரிவில் உள்ள இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்தை வென்று பதக்கப்பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications