தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் கூடாது-அதிமுக
சென்னை:
மதுரை மத்திய தொகுதியில் தேர்தல் பணியில் தமிழக அரசு ஊழியர்களை அமர்த்த கூடாது என தேர்தல்கமிஷனுக்கு அதிமுக தேர்தல் குழு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி இருந்த போது முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலத்திட்டங்களை முறையாகநிறைவேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதை அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுத்தநடவடிக்கை என திமுக பிரசாரம் செய்தது.
இதனால் அரசு ஊழியர்களை அதிமுகவுக்கு எதிராக திரும்பிவிட்டனர். இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில்அரசு ஊழியர்கள் திமுக கட்சிகாரர்கள் போல செயல்பட்டனர்.
தேர்தலின் போது அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 50 முதல் 100 ஓட்டுக்கள் திமுகவுக்குபோட்டனர். திண்டுக்கல்லில் ஒரு அதிகாரி 26 ஒட்டுகளை திமுகவுக்கு போட்டதாக கைது செய்யப்பட்டார்.
தேர்தல் அறிவித்துமே அரசு ஊழியர் சங்கங்கள் பகை முடிக்கும் பணி முடிப்போம் என்று பிரசாரம் செய்தனர்.அரசு ஊழியர்கள் போட்ட தபால் ஓட்டுகளில் 90 சதவீதம் திமுகவுக்கே கிடைத்தது. கருணாநிதி முதல்வர்ஆனாதும் அரசு ஊழியர்கள் அவர் கோட்டைக்கு வந்த மலர் தூவி, பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
மதுரை தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னர் எந்த கோரிக்கையும் இல்லாமலே அரசுஊழியர்களுக்கு கருணாநிதி 5% அகவிலைப்படி அறிவித்தார். இதில் இருந்து திமுகவுக்கும் அரசுஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவு தெளிவாக தெரிகிறது. தற்போது அரசு அலுவலகங்கள் திமுக கட்சிஅலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் மதுரை மத்திய தொகுதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல்அலுவல் பணிகளை செய்கின்றனர். அவர்கள் திமுகவுக்கு ஆதராவக இருப்பதால் முறையாக தேர்தல் பணி நடக்கவாய்ப்பில்லை.
எனவே மத்திய அரசு ஊழியர்களை இதற்காக பணியில் அமர்த்தி முறையான தேர்தல் நடக்க ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்கு அதற்கான பயிற்சிகளையும் வழங்க வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த ஜனநாயககடமை ஆற்றும் என நம்புகிறோம்.
30ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவிக்கவிட்டால் நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைமேற்கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications