தோனி குறித்த அடுத்தடுத்த கேள்விகள்... அழகான பதில்கள்... வைரலான வீடியோ

ராஞ்சி : சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள்.

அவ்வப்போது தோனி குறித்தும், மகள் ஜிவா குறித்தும் சாக்ஷி தோனி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவை வைரலாகி விடுகின்றன.

இந்நிலையில் தற்போது தோனி குறித்த கேள்விகளுக்கு அவரது புகைப்படத்துடன் மகள் ஜிவா அளிக்கும் பதில்களை ஜிவாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சாக்ஷி.

முன்னாள் இந்திய கேப்டன் தோனி சமூக வலைதளங்களில் பெரும்பாலும் செயல்படுவதில்லை. ஆனால் அவரது மனைவி சாக்ஷி தோனி அதிகளவில் செயல்பட்டு வருகிறார். அவர் அவ்வப்போது தோனி குறித்தும் மகள் ஜிவா குறித்தும் போடும் பதிவுகள் ரசிகர்களிடையே பெரும்பாலும் அதிக வரவேற்பை பெற்று விடும்.

View this post on Instagram

Papa s biggest fan !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

டாட்டா பைபை.. போய்ட்டு வாங்க.. யாருக்காகவும் தோனி மாறமாட்டார்.. ரெய்னாவை கழட்டி விடும் சிஎஸ்கே?

தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாயில் உள்ள நிலையில், தோனியின் புகைப்படத்துடன் ஜிவா, சாக்ஷி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அழகான வீடியோவை சாக்ஷி, ஜிவாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அப்பாவின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவர் அந்த வீடியோவிற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni's wife Sakshi had a few fun questions in store for daughter Ziva
Story first published: Thursday, September 10, 2020, 8:17 [IST]
Other articles published on Sep 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X