For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாராலிம்பிக் 2024 தொடக்க விழா எப்போது? எந்த சேனலில் எத்தனை மணிக்கு பார்ப்பது? இந்தியா களமிறங்குகிறதா

பாரிஸ் : பாரா ஒலிம்பிக் 2024 ஆம் ஆண்டு தொடர் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாரிஸ் நகரில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த ஒலிம்பிக் தொடர் முடிவடைந்த அடுத்த இரு வாரத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரை பாரிஸ் நகரம் முதல் முறையாக நடத்துகிறது. விளையாட்டு துறையில் சாதிக்க உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம்.

paralympics 2024 paralympics 2024 opening ceremony 2024

ஆனால் அந்த உடல் தகுதியே ஒரு குறையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. தற்போது பாரிசில் நடைபெறும் 17 வது பேரா ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 4,400 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 22 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கிறார்கள்.

இந்த தொடரில் மொத்தம் 549 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஐந்து பேர் பங்கேற்கும் கால்பந்து, ஜூடோ,நீச்சல் பந்தயம், டேபிள் டென்னிஸ், சக்கர நாற்காலி டென்னிஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி கள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா சார்பாக 84 வீரர் வீராங்கனைகள் சுமார் 12 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர்.

அதிகபட்சமாக பாரா பேட்மிண்டன் போட்டிகளில் 13 வீரர்கள் வீராங்கனைகளும் பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த 2020 டோக்கியோ பாராளுமன்றத்தில் இந்தியா அதிகபட்சமாக ஐந்து தங்கம், எட்டு வெள்ளி,ஆறு வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்த செயல்பாட்டை தாண்டி அதிகப் பதக்கம் இந்தியா வாங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழா ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11:30 மணிக்கு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா மற்றும் அனைத்து போட்டிகளையும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சிகளிலும் ஜியோ சினிமா ஆப்பிள் இலவசமாக பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 27, 2024, 18:31 [IST]
Other articles published on Aug 27, 2024
English summary
Paralympic 2024 opening ceremony timing where to watch in india telecast details பாராலிம்பிக் 2024 தொடக்க விழா எப்போது? எந்த சேனலில் எத்தனை மணிக்கு பார்ப்பது? இந்தியா களமிறங்குகிறதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+