Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 பாராலிம்பிக் பதக்கப்பட்டியல் - டாப் 10இல் இந்தியா இடம் பெற வாய்ப்புள்ளதா? என்ன செய்ய வேண்டும்?

பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து பார்க்கலாம். 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 29 பதக்கங்களை வென்று உள்ளது. கடந்த 2021 பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், இந்த முறை அதை காட்டிலும் அதிக பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

அதே சமயம், இந்தியா பதக்க பட்டியலில் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. தற்போது 29 பதக்கங்கள் வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது.

paralympics 2024 paralympics

பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு மேலே இருக்கும் நாடுகளில் ஸ்பெயின் மட்டுமே 7 தங்க பதக்கங்களை வென்று உள்ளது. அதற்கு மேல் உள்ள நாடுகள் அனைத்தும் 8 முதல் 94 பதக்கங்கள் வரை வென்று உள்ளன. பாராலிம்பிக் பதக்கப் பட்டியலை பொறுத்தவரை அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற நாடுகள் முதலில் வரிசைப்படுத்தப்படும். பின்னர் ஒரே எண்ணிக்கையில் தங்கப் பதக்கங்கள் வென்ற நாடுகளில் எந்த நாடு அதிக வெள்ளிப் பதக்கங்களை வென்று இருக்கிறதோ அந்த நாடு முன்னிலை பெறும்.

அந்த வகையில் பார்த்தால் இந்தியா முதல் பத்து இடங்களில் இடம்பெற வேண்டும் என்றால் அதிக தங்கப் பதக்கங்களை வெல்வது மட்டுமே ஒரே வழி. இனி எத்தனை வெள்ளிப் பதக்கங்கள், வெண்கலப் பதக்கங்களை வென்றாலும் அதனால் இந்தியா தர வரிசையில் பெரிய முன்னேற்றத்தை காண முடியாது. தற்போதுள்ள நிலையில் இந்தியா 15 தங்கப் பதக்கங்களை வென்றால் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற முடியும்.

ஆனால், பாராலிம்பிக் தொடர் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இந்தியாவால் அத்தனை தங்கப் பதக்கங்களை வெல்வது சந்தேகமே. எனவே, இந்தியா முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற வாய்ப்பு மிகவும் குறைவு தான். அதே சமயம், இந்தியாவால் பதக்கப் பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் இடம் பெற முடியும். தற்போது 19வது இடத்தில் இருக்கும் இந்தியா மேலும் இரண்டு அல்லது மூன்று தங்கப் பதக்கங்களை வென்றால் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

Story first published: Sunday, September 8, 2024, 6:15 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+