பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் ஐந்தாவது நாளான இன்று (செப்டம்பர் 1) இந்தியா ஒன்பதுக்கும் மேற்பட்ட பதக்கப் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த பாராலிம்பிக் தொடரில் தற்போது வரை இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று உள்ளது. தற்போது ஒரே நாளில் மேலும் பல பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தடகளத்தில் மட்டும் மூன்று பதக்கப் போட்டிகளில் இன்று இந்தியா விளையாட உள்ளது. அதே போல, பேட்மிண்டனில் ஆறு பதக்கப் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இவை தவிர துப்பாக்கி சுடுதல், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் தகுதி பெற்றால் பதக்கப் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

எனவே, இன்று அதிகபட்சமாக 11 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்சம் ஆறு அல்லது ஏழு பதக்கங்களையாவது இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2024 பாராலிம்பிக் தொடரில் ஐந்தாம் நாள் அன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகள் விவரம் -
12:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 தகுதி - நிஹால் சிங், அமீர் அகமது பட்
13:35 - பாரா தடகளம் - ஆடவர் வட்டு எறிதல் - F56 இறுதிப் போட்டி - யோகேஷ் கதுனியா
13:40க்கு பின் - பாரா பேட்மிண்டன் - கலப்பு இரட்டையர் SH6 வெண்கலப் பதக்கப் போட்டி - சிவராஜன் சோலைமலை/நித்யா ஸ்ரீ சுமதி சிவன் X சுபன்/ரினா மார்லினா (இந்தோனேசியா)
15:30க்கு பின் - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL3 தங்கப் பதக்கப் போட்டி - நிதேஷ் குமார் X டேனியல் பெத்தேல் (கிரேட் பிரிட்டன்)
16:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 தகுதி விரைவு - நிஹால் சிங், அமீர் அகமது பட்
20:00 முதல் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SU5 பதக்கப் போட்டிகள் - துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்
20:15 - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 இறுதிப் போட்டி - நிஹால் சிங், அமீர் அகமது பட் (தகுதிக்கு உட்பட்டது)
20:40 - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் காலிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார்
21:40 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் அரையிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)
21:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 தங்கப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் X லூகாஸ் மஸூர் (ஃபிரான்ஸ்)
21:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 வெண்கலப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் X ஃப்ரெடி செட்டியவான் (இந்தோனேசியா)
22:30 - பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் - F64 இறுதிப் போட்டி - சுமித் ஆன்டில், சந்தீப் சஞ்சய் சர்கார், சந்தீப்
22:34 - பாரா தடகளம் - பெண்களுக்கான வட்டு எறிதல் - F53 இறுதிப் போட்டி - காஞ்சன் லக்கானி
22:35 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் பதக்க சுற்றுகள் - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)
23:50க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SH6 வெண்கலப் பதக்கப் போட்டி - நித்யா ஸ்ரீ சுமதி சிவன் X ரினா மார்லினா (இந்தோனேசியா)
23:50 - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - டி20 சுற்று 1 - தீப்தி ஜீவன்ஜி