Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியல் - அமெரிக்காவுக்கு ஆப்பு.. இந்தியா எத்தனை பதக்கம்? எந்த இடம்?

பாரிஸ் : 2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் 15 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் அதிரடியான முன்னேற்றத்தை கண்டுள்ளது. நான்காம் நாள் முடிவில் இந்தியா பதக்கப் பட்டியலில் இந்தியா 30 வது இடத்தில் இருந்தது. ஐந்தாம் நாள் அன்று இந்திய வீரர், வீராங்கனைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றனர்.

இதில் இரண்டு தங்கப்பதக்கமும் அடங்கும். இத்துடன் இந்தியா ஒட்டுமொத்தமாக 15 பதக்கங்களை வென்று உள்ளது. மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இந்த பதக்கப் பட்டியலில் அமெரிக்கா அதிர்ச்சிகரமாக மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிக தங்கப் பதக்கங்களை வென்று சீனா முதல் இடத்தில் உள்ளது.

paralympics 2024 paralympics 2024

தற்போது சீனா 43 தங்கம், 30 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 87 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கிரேட் பிரிட்டன் உள்ளது. அந்த நாடு 29 தங்கம், 15 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 54 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த நாடு 13 தங்கம், 19 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது அமெரிக்கா. மொத்தமாக 42 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் தொடரில் அமெரிக்காவை நெருங்கி இருந்த போதும் முதல் இடத்தை பிடிக்க முடியாமல் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது சீனா. ஆனால், பாரா ஒலிம்பிக் தொடரில் சீனா, அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவால் சீனாவை முந்துவது மிக மிக கடினம் என கருதப்படுகிறது.

Story first published: Tuesday, September 3, 2024, 12:27 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+