பாராலிம்பிக் 2024 ஆறாம் நாள் - இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் விவரம்.. பதக்க வாய்ப்பு உள்ளதா?
2024 பாராலிம்பிக் தொடரில் ஐந்தாம் நாள் நடந்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் ஏழு பதக்கங்களை வென்று மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 15 வது இடத்தில் உள்ளது. தற்போது ஆறாவது நாள் இந்திய வீரர்கள் மேலும் பல முக்கிய போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆறாம் நாளான இன்று (செப்டம்பர் 3) இந்திய வீரர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் மொத்தம் ஐந்து பதக்கப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
பாரா தடகளத்தில் நான்கு இறுதிப் போட்டிகளிலும், பாரா துப்பாக்கி சுடுதலில் ஒரு இறுதிப் போட்டியிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்தியா ஆறாம் நாள் அன்றும் சில பதக்கங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் வென்று இருக்கிறது. இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. செப்டம்பர் 8 உடன் பாராலிம்பிக் தொடர் முடிவடைய உள்ளது.

2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகள் விவரம் -
13:00 - பாரா துப்பாக்கி சுடுதல் - R8 - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் SH1 தகுதி - மோனா அகர்வால், அவனி லெகாரா
14:28 - பாரா தடகளம் - பெண்கள் ஷாட் புட் - F34 இறுதி - பாக்யஸ்ரீ ஜாதவ்
15:20 - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் 1/8 எலிமினேஷன் - பூஜா
19:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - R8 - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் SH1 இறுதி - மோனா அகர்வால், அவனி லெகாரா
20:30 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் காலிறுதி - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)
21:38 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் அரையிறுதி - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)
22:27 முதல் - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் மெடல் போட்டிகள் - பூஜா (தகுதிக்கு உட்பட்டது)
22:38 - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - டி20 இறுதிப் போட்டி - தீப்தி ஜீவன்ஜி
23:50 - பாரா தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் - T63 இறுதி - மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார்
00:13 - பாரா தடகளம் - ஆண்கள் ஈட்டி எறிதல் - F46 இறுதிப் போட்டி - அஜீத் சிங், ரிங்கு, சுந்தர் சிங் குர்ஜார்
2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகளை எப்படி பார்க்கலாம்?
டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பாராலிம்பிக் போட்டிகளை காணலாம். ஜியோசினிமா இணையதளம் மற்றும் செயலியிலும் போட்டிகளை நேரலையில் காணலாம். மேலும், பாராலிம்பிக் தொடரின் அதிகரப்ப்பூர்வ யூட்யூப் சேனலிலும் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications