Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paralympics 2024: இன்று (செப். 6) இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கா? எத்தனை பதக்கப் போட்டிகள்?

பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவு அதிக பதக்கங்களை அள்ளி மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த தொடரின் 9 ஆம் நாள் அன்றும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்வார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

எட்டு நாள் நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா ஐந்து தங்கப் பதக்கம், 9 வெள்ளிப் பதக்கம், 11 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. மொத்தம் 25 பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. இன்று செப்டம்பர் 6 இந்தியா வீராங்கனைகள் எத்தனை பதக்க போட்டியே பதக்க வாய்ப்பு உள்ள போட்டிகளில் பங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த விவரத்தை இங்கே காணலாம்

paralympics 2024 paralympics 2024

இன்று மதியம் 2.07 மணிக்கு பாரா ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவர் பிரிவில் தீபேஷ் குமார் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். மதியம் 3.21 மணிக்கு பாரா உயரம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் பிரவீன் குமார் பங்கேற்கிறார். இரவு 8.30 மணிக்கு பாரா பளு தூக்குதல் போட்டியில் மகளிர் 67 கிலோ பிரிவில் இந்தியாவின் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார்.

இரவு 10.30 மணிக்கு பாரா ஈட்டி எறிதல் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் பாவனாபென் பங்கேற்கிறார். இரவு 10.34 மணிக்கு ஆடவர் பாரா ஷாட் புட்டில் இந்தியாவின் சோமன் ரானா பங்கேற்கிறார். இன்று இந்தியா பங்கேற்கும் ஒட்டுமொத்த போட்டிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று பங்கேற்கும் போட்டிகளின் விவரம் -

13:30 முதல் - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 ஹீட்ஸ் - யாஷ் குமார்

13:38 முதல் - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் D12 சுற்று 1 - சிம்ரன்

13:50 முதல் - பாரா கேனோ - பெண்கள் வா' ஒற்றையர் 200 மீட்டர் - VL2 ஹீட்ஸ் - பிராச்சி யாதவ்

14:07- பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F54 இறுதிப் போட்டி - திபேஷ் குமார்

14:50 - பாரா தடகளம் - ஆடவர் 400 மீட்டர் D47 சுற்று 1 - திலீப் மஹது காவிட்

14:55 - பாரா கேனோ - பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 ஹீட்ஸ் - பூஜா ஓஜா

15:21- பாரா தடகளம் - ஆடவர் உயரம் தாண்டுதல் T64 இறுதிப் போட்டி - பிரவீன் குமார்

20:30 - பாரா பவர் லிஃப்டிங் - பெண்கள் 67 கிலோ வரை இறுதிப் போட்டி - கஸ்தூரி ராஜாமணி

22:30 - பாரா தடகளம் - பெண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டி - பாவனாபென் அஜபாஜி சவுத்ரி

22:34 - பாரா தடகளம் - ஆடவர் ஷாட் புட் F57 இறுதிப் போட்டி - சோமன் ராணா, ஹோகடோ ஹோடோஜெ செமா

23:12 - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் D12 அரையிறுதி - சிம்ரன் (தகுதிக்கு உட்பட்டது)

Story first published: Friday, September 6, 2024, 8:30 [IST]
Other articles published on Sep 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+