Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாராலிம்பிக்ஸ்: புதிய வரலாறு.. 29 பதக்கங்களுடன் நிறைவு செய்த இந்தியா.. பதக்கம் வென்ற வீரர்கள் யார்?

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தில் நிறைவு செய்துள்ளது. தற்போது இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர்களின் முழு பட்டியலையும் பார்க்கலாம்.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடர் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று பல்வேறு போட்டிகளும் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமாக பாராலிம்பிக்ஸ் தொடரில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

paralympics 2024 paralympics 2024

இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் 24வது இடத்தை பிடித்த இந்தியா, இம்முறை 18வது இடத்திற்கு முன்னேறி இருப்பதும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

* அவானி லெக்காரா - மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் - தங்கம்

* மோனா அகர்வால் - மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் - வெண்கலம்

* பிரீத்தி பால் - மகளிருக்கான 100 மீ ஓட்டப்பந்தயம் டி35 பிரிவு - வெண்கலம்

* மணிஷ் நார்வால் - ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவு - வெள்ளி

* ரூபினா ஃபிரான்சிஸ் - மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவு - வெண்கலம்

* பிரீத்தி பால் - மகளிருக்கான 100 மீ ஓட்டப்பந்தயம் டி35 பிரிவு - வெண்கலம்

* நிஷாத் குமார் - ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவு - வெள்ளி

* யோகேஷ் கதுனியா - ஆடவருக்கான வட்டு எறிதல் எஃப் 56 பிரிவு - வெள்ளி

* நிதீஷ் குமர் - ஆடவருக்கான பேட்மிண்டன் எஸ்எல்3 பிரிவு - தங்கம்

* துளசிமதி முருகேசன் - மகளிருக்கான பேட்மிண்டன் எஸ்யூ5 பிரிவு - வெள்ளி

* மனிஷா ராமதாஸ் - மகளிருக்கான பேட்மிண்டன் எஸ்யூ5 பிரிவு - வெண்கலம்

* சுஹாஸ் எத்திராஜ் - ஆடவருக்கான பேட்மிண்டன் எஸ்எல்4 - வெள்ளி

* ராகேஷ் குமார் / ஷூத்தல் தேவி - வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவு - வெண்கலம்

* சுமித் அண்டில் - ஈட்டி எறிதல் எஃப்64 - தங்கம்

* நித்ய ஸ்ரீ சிவன் - பேட்மிண்டன் எஸ்ஹெச்6 - வெண்கலம்

* தீப்தி ஜீவன்ஜி - மகளிருக்கான 400 மீ டி20 - வெண்கலம்

* சுந்தர் சிங் குர்ஜார் - ஈட்டி எறிதல் எஃப்46 - வெண்கலம்

* அஜீத் சிங் - ஈட்டி எறிதல் எஃப்46 - வெள்ளி

* மாரியப்பன் தங்கவேலு - ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 - வெண்கலம்

* ஷரத் குமார் - ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 - வெள்ளி

* சச்சின் கில்லாரி - ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப் 46 - வெள்ளி

* ஹர்விந்தர் சிங் - வில்வித்தை - தங்கம்

* தரம்பீர் - ஆடவருக்கான கிளப் த்ரோ 51 - தங்கம்

* பிரனவ் சூர்மா - ஆடவருக்கான கிளப் த்ரோ 51 - வெள்ளி

* கபில் பார்மர் - ஜூடோ 60 கிலோ - வெண்கலம்

* பிரவீன் குமார் - உயரம் தாண்டுதல் டி64 - தங்கம்

* ஹகாடோ சீமா - ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப்57 - வெண்கலம்

* சிம்ரன் சிங் - மகளிருக்கான 20 மீ ஓட்டப்பந்தயம் டி12 - வெண்கலம்

* நவ்தீன் சிங் - ஈட்டி எறிதல் எஃப்41 - தங்கம்

Story first published: Sunday, September 8, 2024, 16:49 [IST]
Other articles published on Sep 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+