For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - அமெரிக்காவை முந்திய 2 நாடுகள்.. இந்தியா எந்த இடம்?

பாரிஸ்: 2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இரண்டு நாடுகள் அமெரிக்காவை பின்தள்ளி உள்ளன. ஒலிம்பிக் தொடரில் எப்போதும் முதல் இடத்தை பிடித்து வரும் அமெரிக்கா தற்போது பாரா ஒலிம்பிக் தொடரில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா மற்றும் கிரேட் பிரிட்டன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. கடந்த 2021 டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை மட்டுமே வென்று இருந்தது. அப்போது 5 தங்கப் பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்று இருந்தது. இந்த முறை 6 தங்கப் பதக்கங்களை வென்றதோடு மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.

paralympics 2024 paralympics 2024

2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இதுவரை 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 6 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. இதையடுத்து இந்தியா பதக்கப் பட்டியலில் 17 வது இடத்தில் உள்ளது

சீனா மொத்தம் 188 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. 83 தங்கம், 64 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது சீனா. கிரேட் பிரிட்டன் மொத்தம் 100 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த நாடு 42 தங்கம், 34 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. அமெரிக்கா 86 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த நாடு 31 தங்கம், 36 வெள்ளி மற்றும்19 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. நான்காவது இடம் முதல் பத்தாவது இடம் வரையில் நெதர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், உக்ரைன், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

2024 பாராலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியல் விவரம் (முதல் 10 தரவரிசை மற்றும் இந்தியாவின் தரவரிசை விவரம்) -

1. சீனா - 83 தங்கம், 64 வெள்ளி, 41 வெண்கலம் - 188 பதக்கங்கள்

2. கிரேட் பிரிட்டன் - 42 தங்கம், 34 வெள்ளி, 24 வெண்கலம் - 100 பதக்கங்கள்

3. அமெரிக்கா - 31 தங்கம், 36 வெள்ளி, 19 வெண்கலம் - 86 பதக்கங்கள்

4. நெதர்லாந்து - 24 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் - 48 பதக்கங்கள்

5. இத்தாலி - 20 தங்கம், 13 வெள்ளி, 30 வெண்கலம் - 63 பதக்கங்கள்

6. பிரான்ஸ் - 17 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் - 65 பதக்கங்கள்

7. பிரேசில் - 17 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலம் - 70 பதக்கங்கள்

8. உக்ரைன் - 16 தங்கம், 23 வெள்ளி, 28 வெண்கலம் - 67 பதக்கங்கள்

9. ஆஸ்திரேலியா - 16 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலம் - 52 பதக்கங்கள்

10. ஜப்பான் - 12 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம் - 37 பதக்கங்கள்

17. இந்தியா - 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் - 27 பதக்கங்கள்

Story first published: Saturday, September 7, 2024, 14:19 [IST]
Other articles published on Sep 7, 2024
English summary
Paralympics 2024 medal tally: China and Great Britain pushed USA to third place
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+