For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Paralympics 2024 செப். 7 - இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் என்னென்ன? முழு விவரம்

பாரிஸ்: 2024 பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 27 பதக்கங்களை வென்று மிகப்பெரும் சாதனை செய்துள்ளது. பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிக அதிக அளவில் பதக்கங்களை வென்று உள்ளது இந்தியா. கடந்த 2021 டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை மட்டுமே வென்று இருந்தது.

தற்போது அதைக் காட்டிலும் எட்டு பதக்கங்களை கூடுதலாக வென்று மாபெரும் சாதனை செய்துள்ளது. 2024 பாரா ஒலிம்பிக் தொடரில் எட்டு நாட்கள் முடிவில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது.

paralympics 2024 paralympics 2024

இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் பாரா ஒலிம்பிக் போட்டிகள் மீதம் உள்ளன. இதில் இந்தியா மேலும் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பத்தாம் நாளான இன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள பெரும்பாலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. நாளையுடன் (செப்டம்பர் 10) பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைய உள்ளன, அதற்கு முன் இந்தியா முப்பதுக்கும் அதிகமான பதக்கங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது.

2024 பாரா ஒலிம்பிக் தொடரில் 10 ஆம் நாளான இன்று (செப்டம்பர் 9) இந்திய வீரர் வீராங்கனைகள் விளையாட உள்ள போட்டிகளின் பட்டியலை இங்கே காணலாம் -

13:00 - பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலை - ஆண்கள் C1-3 சாலைப் பந்தயம் - அர்ஷத் ஷேக்

13:05 - பாரா சைக்கிள் ஓட்டுதல் சாலை - பெண்கள் C1-3 சாலைப் பந்தயம் - ஜோதி கதேரியா

13:30 - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 அரை இறுதிப் போட்டி - யாஷ் குமார்

13:55 - பாரா நீச்சல் - ஆண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை - S7 ஹீட்ஸ் - சுயாஷ் நாராயண் ஜாதவ்

13:58 - பாரா கேனோ - பெண்கள் வா' ஒற்றையர் 200 மீட்டர் - VL2 அரை இறுதிப் போட்டி - பிராச்சி யாதவ்

14:50 - பாரா கேனோ - ஆண்கள் கயாக் ஒற்றையர் 200 மீட்டர் - KL1 இறுதி ஏ பிரிவு - யாஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)

15:14 முதல் - பாரா கேனோ - பெண்கள் வா' ஒற்றையர் 200 மீட்டர் - VL2 இறுதிப் போட்டி - பிராச்சி யாதவ்

22:00 - பாரா நீச்சல் - ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை - S7 இறுதிப் போட்டி - சுயாஷ் நாராயண் ஜாதவ் (தகுதிக்கு உட்பட்டது)

22:30 - பாரா தடகளம் - ஆண்கள் ஈட்டி எறிதல் - F41 இறுதிப் போட்டி - நவ்தீப்

23:03 - பாரா தடகளம் - பெண்கள் 200 மீ - டD12 இறுதிப் போட்டி - சிம்ரன்

00:29 (செப்டம்பர் 10) - பாரா தடகளம் - ஆடவர் 400 மீ - T47 இறுதிப் போட்டி - திலீப் மஹது காவிட்

Story first published: Saturday, September 7, 2024, 8:25 [IST]
Other articles published on Sep 7, 2024
English summary
Paralympics 2024 Schedule Day 10: India to participate in more medal matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+