பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் நான்காம் நாள் (செப்டம்பர் 1) அன்று இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூன்று நாள் முடிவடைந்த நிலையில் இந்தியா ஐந்து பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. இந்த நிலையில், நான்காம் நாள் அன்று இந்திய வீரர், வீராங்கனைகள் ஆறு இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். எனவே, இன்று பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகள் அட்டவணை -
12:00 - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SL3 காலிறுதி - மந்தீப் கவுர் X மரியம் எனியோலா போலாஜி (நைஜீரியா)
12:50க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SL4 காலிறுதி - பாலக் கோலி X காலிமடஸ் சதியா (இந்தோனேசியா)
13:00 - பாரா துப்பாக்கி சுடுதல் - R3 - கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ப்ரோன் SH1 தகுதி - சித்தார்த்த பாபு, அவனி லெக்ரா
13:39 - பாரா தடகளம் - பெண்கள் 1500 மீட்டர்- D11 சுற்று 1 - ரக்ஷிதா ராஜு
13:40க்கு பின் - பாரா பேட்மிண்டன் - மகளிர் ஒற்றையர் SU5 காலிறுதி - மனிஷா ராமதாஸ் X டொயோடா மாமிகோ (ஜப்பான்)
14:00 - பாரா துடுப்பு படகுப் போட்டி - PR3 கலப்பு இரட்டை ஸ்கல்ஸ் பைனல் பி - அனிதா, நாராயண கொங்கனபள்ளே
15:00 - பாரா துப்பாக்கி சுடுதல் - R5 - கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ப்ரோன் SH2 தகுதி - ஸ்ரீஹர்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா
15:12 - பாரா தடகளம் - ஆண்கள் ஷாட் புட் - F40 இறுதி - ரவி ரோங்காலி
16:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - R3 - கலப்பு 10 மீட்டர்ஏர் ரைபிள் ப்ரோன் SH1 இறுதி - சித்தார்த்தா பாபு, அவனி லெகாரா (தகுதிக்கு உட்பட்டது)
17:00 க்கு முன் இல்லை - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SH6 காலிறுதி - நித்யா ஸ்ரீ சுமதி சிவன் X ஒலிவியா ஸ்மிஜில் (போலாந்து)
18:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - R5 - கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் ப்ரோன் SH2 இறுதி - ஸ்ரீஹர்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா (தகுதிக்கு உட்பட்டது)
19:17 - பாரா வில்வித்தை - ஆண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன், 1/8 எலிமினேஷன் - ராகேஷ் குமார் X கென் ஸ்வாகுமிலாங் (இந்தோனேசியா)
20:10 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL3 அரையிறுதி - நிதேஷ் குமார் X டெய்சுகே புஜிஹாரா (ஜப்பான்)
21:00 க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SL3 அரையிறுதி - மன்தீப் கவுர் X சியாவோ ஜூசியான் (சீனா) (தகுதிக்கு உட்பட்டது)
21:50க்கு பின் - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 அரையிறுதி - சுஹாஸ் யதிராஜ் X சுகந்த் கடம்
22:40க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SL4 அரையிறுதி - பாலக் கோஹ்லி X லீனி ராத்ரி ஒக்டிலா (இந்தோனேசியா) (தகுதிக்கு உட்பட்டது)
21:15 - பாரா டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் - WS4 - 16வது சுற்று - பவினாபென் படேல் X மார்தா வெர்டின் (மெக்சிகோ)
21:16 - பாரா வில்வித்தை - ஆண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் காலிறுதி - ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)
22:24 - பாரா வில்வித்தை - ஆண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் அரையிறுதி - ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)
22:40 - பாரா தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் - T47 இறுதிப் போட்டி - நிஷாத் குமார், ராம் பால்
23:13 - பாரா வில்வித்தை - ஆண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் பதக்க சுற்றுகள் - ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)
23:27 - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் - D35 இறுதி - ப்ரீத்தி பால்
(செப்டம்பர் 2) 00:15 - பாரா டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் - WS3 - ரவுண்ட் ஆஃப் 16 - சோனல்பென் படேல் X ஆண்டேலா முஜினிக் வின்செடிக் (குரோஷியா)
(செப்டம்பர் 2) 00:20க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SH6 அரையிறுதி - நித்யா ஸ்ரீ சுமதி சிவன் X லின் ஷுவாங்பாவ் (சீனா) (தகுதிக்கு உட்பட்டது)
(செப்டம்பர் 2) 02:00 மணிக்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SU5 அரையிறுதி - துளசிமதி முருகேசன் X மனிஷா ராமதாஸ்/மாமிகோ டொயோடா (ஜப்பான்)