Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாராலிம்பிக் தொடரில் 3வது வெள்ளிப் பதக்கம்.. வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா அபாரம்

பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வட்டு எறிதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா எட்டாவது பதக்கம் வென்றது. வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் அவர் தனது முதல் முயற்சியிலேயே 42.22 மீட்டர் தூரம் வீசி தனது சிறந்த தூரத்தை பதிவு செய்தார்.

அடுத்த ஐந்து முயற்சிகளில் அவர் 41.50 மீட்டர், 41.55 மீட்டர், 40.33 மீட்டர், 40.89 மீட்டர், மற்றும் 39.68 மீட்டர் தூரம் மட்டுமே வீசினார். தனது முதல் முயற்சியில் அவர் வீசிய 42.22 மீட்டர் வீச்சு அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.

paralympics 2024 paralympics 2024

பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாடினி பட்டிஸ்டா வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் 46.86 மீட்டர் தூரம் வீசி புதிய பாராலிம்பிக் சாதனை படைத்தார். அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். கிரீஸ் நாட்டை சேர்ந்த கோன்ஸ்டன்டினோஸ் ஜோனிஸ் 41.32 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை எட்டு பதக்கங்களை வென்றுள்ளது. ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. இந்த எட்டு பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 30வது இடத்தில் உள்ளது. இன்று மேலும் பல பதக்கப் போட்டிகள் இருக்கும் நிலையில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய வீரர்கள் இன்று (செப்டம்பர் 2) அடுத்து ஆட உள்ள போட்டிகள் அட்டவணை -

15:30க்கு பின் - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL3 தங்கப் பதக்கப் போட்டி - நிதேஷ் குமார் X டேனியல் பெத்தேல் (கிரேட் பிரிட்டன்)

16:30 - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 தகுதி விரைவு - நிஹால் சிங், அமீர் அகமது பட்

20:00 முதல் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SU5 பதக்கப் போட்டிகள் - துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ்

20:15 - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 இறுதிப் போட்டி - நிஹால் சிங், அமீர் அகமது பட் (தகுதிக்கு உட்பட்டது)

20:40 - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் காலிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார்

21:40 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் அரையிறுதி - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)

21:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 தங்கப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் X லூகாஸ் மஸூர் (ஃபிரான்ஸ்)

21:40 - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் SL4 வெண்கலப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் X ஃப்ரெடி செட்டியவான் (இந்தோனேசியா)

22:30 - பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் - F64 இறுதிப் போட்டி - சுமித் ஆன்டில், சந்தீப் சஞ்சய் சர்கார், சந்தீப்

22:34 - பாரா தடகளம் - பெண்களுக்கான வட்டு எறிதல் - F53 இறுதிப் போட்டி - காஞ்சன் லக்கானி

22:35 முதல் - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் பதக்க சுற்றுகள் - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (தகுதிக்கு உட்பட்டது)

23:50க்கு பின் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் SH6 வெண்கலப் பதக்கப் போட்டி - நித்யா ஸ்ரீ சுமதி சிவன் X ரினா மார்லினா (இந்தோனேசியா)

23:50 - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - டி20 சுற்று 1 - தீப்தி ஜீவன்ஜி

Story first published: Monday, September 2, 2024, 15:50 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+