பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை மகளிர் பிரிவில் அல்ஜீரியா வீராங்கனை இமான் கலீப் மீது பாலின சர்ச்சை எழுப்பப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 66 கிலோ எடை பிரிவில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா உடன் புகாருக்குள்ளான அல்ஜூரியா வீராங்கனை இமான் கலிப் பலப்பரிட்சை நடத்தினார்.
வெறும் 46 நொடிகளை நீடித்த இந்த போட்டியை இத்தாலி வீராங்கனை பாதியிலே நிறுத்தி, இந்த போட்டியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும் கள மேடையிலே கதறி அழுதார். மகளிர் பிரிவில் ஒரு ஆண் களமிறங்கி விளையாடுவதாகவும் அவருடைய ஒரு குத்பை கூட என்னால் தாங்க முடியவில்லை என்றும் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா குற்றம் சாட்டினார்.

புகாருக்குள்ளான இமான் கலீல் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து பாலின சர்ச்சை எழுந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆணுக்குரிய டி. என். ஏக்கள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் எப்படி அவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர், மகளிர் விளையாடும் போட்டியில் எப்படி ஆண்கள் விளையாட அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதை பகிர்ந்த எலான் மஸ்க், நிச்சயமாக இதை செய்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் இத்தாலி வீராங்கனைக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து தனது X களத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இதேபோன்று பிரபல டபிள்யூ டபிள்யூ வீரர் லோகன் பால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இத்தாலி வீராங்கனை ஏஞ்சிலா எவ்வளவு கடினமாக உழைத்து இருப்பார். ஆனால் ஒரு ஆணுடன் மோதி தன்னுடைய பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மகளிர் பிரிவில் மகளிர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்திருக்கிறார். மற்றொரு டிவிட்டில் தான் இமான் கலீப்க்கு எதிராக பேசியதால் நான் மூன்றாம் பாலினத்தினருக்கு எதிரானவன் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.