Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Tom cruise -ஒலிம்பிக் நிறைவு விழாவில் மைதானத்தின் கூரையிலிருந்து குதித்த டாம் குரூஸ்!வேற லெவல் stunt

olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில் அதிகாலை இந்திய நேரப்படி 12.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி அதிகாலை 3:30 மணி வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்தில் சுற்றி வந்து ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றனர். இந்த நிறைவு விழாவில் பிரபல பாப் பாடகி லேடி காகா பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

tom cruise

யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நிறைவு விழா நடைபெறும் மைதானத்தில் மேற்கூரையிலிருந்து குதித்தார். டாம் குரூஸ் வருவதை ஒலிம்பிக் சம்மேளனம் ரகசியமாக வைத்திருந்ததை அடுத்து அவருடைய வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

அதன் பிறகு அங்கு நின்ற விளையாட்டு வீரர்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டும் கை கொடுத்தும் வந்த டாம் குரூஸ் ஒலிம்பிக் கொடியை ஏந்தி பைக்கில் வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டார். தனது பைக்கில் ஒலிம்பிக் கொடியை விமான தளத்திற்கு சென்றார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்த ஒலிம்பிக் நடைபெறுவதையொட்டி கொடியை அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் சில நிமிடங்களில் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள் விளையாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்த்தார். டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் பல்வேறு காட்சிகள் பிரான்சிங் பாரிஸ் நகரில் தான் எடுக்கப்பட்டது.

இதனால் அதனை நினைவுபடுத்தும் விதமாக மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் கதாபாத்திர தோற்றத்தில் டாம் குரூஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சாகசங்களை அபாரமாக செய்யும் டாம் குரூஸின் வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 12, 2024, 5:24 [IST]
Other articles published on Aug 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+