பாரிஸ் ஒலிம்பிக் 2024 நிறைவு விழா.. பிரியா விடை அளித்த மக்கள்.. லாஸ் ஏஞ்சலஸிடம் கொடி ஒப்படைப்பு
பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் 26 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.
32 விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 329 பிரிவுகளுக்கான போட்டி நடைபெற்ற முடிந்தது. இதில் இந்தியாவிலிருந்து 117 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று ஆறு பதக்கங்களை கைப்பற்றினர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 71 வது இடத்தை நிறைவு செய்தது.

பதக்க பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலத்துடன் 126 பதக்கங்களுடன் முதலிடத்தில் நிறைவு செய்தது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தை நிறைவு செய்தது.
நிறைவு விழாவில் ஒவ்வொரு நாடும் தங்களது கொடிகளை ஏந்தி வீரர்கள் ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றனர். இந்தியா சார்பாக நிறைவு விழாவில் இரண்டு வெண்கல பதக்கம் என்ற துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கரும், வெண்கல பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பி ஆர் ஸ்ரீஜேசும் இந்திய அணியின் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிறைவு விழாவில் போட்டியை நடந்து முடிக்க உதவிய சுமார் 40 ஆயிரம் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஒலிம்பிக் கொடி லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கெரன் பாஸிடம் கைமாற்றப்பட்டது. இந்த நிறைவு விழாவில் பிரபல பாடகர்கள் பில்லி எலிஸ், ஸ்னூப் டாக் மற்றும் ரெட் ஹார்ட் சில்லி பேப்பர் குழுவினர் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தினர். தொடக்க நிகழ்ச்சி செயின் ஆற்றில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நிறைவு விழா மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications