Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரீஸ் ஒலிம்பிக் 2024 - வீரர்களுக்கு 3 லட்சம் காண்டம் வழங்க முடிவு.. உடலுறவுக்கான தடை நீக்கம்

பாரீஸ் : 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 160 நாடுகளில் இருந்து 10,000 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். சுமார் 329 போட்டி பிரிவுகளில் பதக்கம் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்காக பாரிசில் விளையாட்டு கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அது சுமார் 14,000 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Paris Olympics 2024 2024 india india schedule sports news

இந்த நிலையில் பல கலாச்சாரத்தில் இருந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு உடலுறவு செய்வது என்பது சர்வ சாதாரணம். இதனால் 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

வீரர்கள் உறங்குவதற்கு அட்டையால் உருவான படுக்கை அமைக்கப்பட்டது. இதன் மூலம் வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தற்போது இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் வீரர், வீராங்கனைகளுக்கு இம்முறை மூன்று லட்சம் காண்டம் வழங்க ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்னும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஒலிம்பிக் கமிட்டி, வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் இந்த காண்டம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் உடலுறவு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட காண்டம் கண்டெடுக்கப்பட்டதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. சுமார் 19 நாட்கள் வீரர்கள் விளையாட்டு கிராமத்தில் இருப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கு செய்யப்பட்டு இருக்கிறது. சூப்பர் மார்க்கெட், சலூன் கடை வீரர் வீராங்கனைகள் சந்தித்து பேசுவதற்காக மது இல்லாத ஸ்போர்ட்ஸ் பார்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

Story first published: Wednesday, July 10, 2024, 19:01 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+