Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - என் வாழ்வில் இப்படி ஒரு குத்தை வாங்கியது இல்லை.. வெடித்த பாலின சர்ச்சை.. கதறி அழுத கரினி

பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 66 கிலோ பிரிவு குத்துச் சண்டை போட்டியில் அல்ஜீரியாவின் இமான் கெலிஃப்-புக்கு எதிராக மோதினார் இத்தாலியின் ஏஞ்சலா கரினி.
இந்தப் போட்டி தொடங்கிய 46 வினாடிகளில் போட்டியில் இருந்து விலகினார் கரினி.

அல்ஜீரியாவின் இமான் கெலிஃப் தன்னை பலமாக குத்தியதாகவும் தனது வாழ்நாளில் இப்படி மோசமான ஒரு குத்தை வாங்கியது இல்லை என்றும் அழுதபடியே கூறினார் கரினி. கடந்த 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் போது இமான் கெலிஃப் பாலின சோதனையில் பெண் என நிரூபிக்க தவறியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

ஆனால், அவருக்கு எந்த சோதனையும் இன்றி பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் பிரிவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இத்தாலியின் ஏஞ்சலா கரினி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி தொடங்கிய 30 வது வினாடியில் ஏஞ்சலா கரினியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார். கரினியின் மூக்கில் பலமாக தாக்கியதால் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

அவர் அப்போதே போட்டியை நிறுத்துமாறு கூறியதுடன், தான் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை அடுத்து இமான் கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு ஆணுடன், ஒரு பெண் குத்து சண்டை போட்டியில் மோதியதாக இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெடித்தது. பலரும் கரினிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம், கரினி இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் இத்தாலிய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. மேலும், தனது தந்தையின் பதக்க கனவையும் தான் நிறைவேற்றவில்லை எனக் கூறி கரினி கதறி அழுதார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கரினி, "நான் எனது நாட்டுக்காக உண்மையாக இருந்து இருக்கிறேன். ஆனால், இந்த முறை என்னால் போட்டியில் தொடர்ந்து ஆட முடியவில்லை. இரண்டாவது குத்தை வாங்கியவுடன் என்னால் இந்த போட்டியில் விளையாட முடியவில்லை." என்றார்.

மேலும், "இத்தனை ஆண்டுகால எனது குத்துச்சண்டை வாழ்வில் இப்படி ஒரு குத்தை நான் வாங்கியதே இல்லை. எனது மூக்கில் நான் அதிக வலியை உணர்ந்தேன். என் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். நான் இன்றைய இரவு தோல்வியடையவில்லை. ஆனால் முதிர்ச்சியுடன் சரணடைந்தேன். நான் ஒரு முதிர்ச்சி அடைந்த பெண். குத்துச் சண்டை மேடை தான் எனது வாழ்க்கை. நான் எப்போதும் உள்ளுணர்வுடன் இருந்திருக்கிறேன். சில விஷயங்கள் சரியாக இல்லை என்பதை நான் உணர்ந்ததால் இதை செய்தேன். இது சரணடைவது அல்ல. முதிர்ச்சியுடன் நிறுத்திக் கொள்வது." என்றார் கரினி. இதன் மூலம் அவர் தான் ஒரு ஆணுடன் சண்டையிட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெடித்துள்ளது.

Story first published: Friday, August 2, 2024, 8:16 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+