2024 ஒலிம்பிக் - ஆகஸ்ட் 3 இந்திய வீரர்கள் ஆட உள்ள போட்டிகள் அட்டவணை, நேரம்.. முழு விவரம்
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை நடந்த ஏழு நாள் ஆட்டத்தில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. அடுத்து எட்டாம் நாள் ஆட்டம் ஆகஸ்ட் 3 அன்று நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 3 ஆண்டு இந்தியாவுக்கு குறைவான போட்டிகளே உள்ளன. அதில் மிக முக்கியமாக மனு பாக்கர் போட்டி அமைந்துள்ளது. அவர் மகளிர் துப்பாக்கி சுடுதல் 25 மீ பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே, அவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இருப்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 3 அன்று படகோட்டுதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை ஆகிய மூன்று விளையாட்டுக்களில் மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன.
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 3 அன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகள் அட்டவணை -
12:30 - ஷூட்டிங் - ஸ்கீட் பெண்கள் தகுதி நாள் 1 - ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான்
12:30 - கோல்ஃப் - ஆண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 - சுபங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லர்
13:00 - துப்பாக்கி சுடுதல் - 25 மீ பிஸ்டல் மகளிர் இறுதிப் போட்டி - மனு பாக்கர்
13:52 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று - தீபிகா குமாரி vs மிச்செல் க்ரோப்பன் (ஜெர்மனி)
14:05 - வில்வித்தை - பெண்கள் தனிநபர் 1/8 எலிமினேஷன் சுற்று - பஜன் கவுர் vs தியானந்தா சோய்ருனிசா (இந்தோனேசியா)
15:45 - படகோட்டம் - ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 5 - விஷ்ணு சரவணன்
ரேஸ் 5க்கு பிறகு - ஆடவர் டிங்கி ரேஸ் 6 - விஷ்ணு சரவணன்
17:55 - படகோட்டம் - பெண்களுக்கான டிங்கி பந்தயம் 5 - நேத்ரா குமணன்
படகோட்டம் - ரேஸ் 5க்கு பிறகு - பெண்களுக்கான டிங்கி ரேஸ் 6 - நேத்ரா குமணன்
00:02 (ஆகஸ்ட் 4) - குத்துச்சண்டை - ஆண்கள் 71 கிலோ காலிறுதி - நிஷாந்த் தேவ் vs மார்கோ அலோன்சோ வெர்டே அல்வாரெஸ் (மெக்சிகோ)


Click it and Unblock the Notifications