Olympics 2024 - ஆகஸ்ட் 4 இந்தியா ஆடும் போட்டிகள் என்னென்ன? போட்டி நேரம், வீரர்கள் யார்?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்கள் வென்று இருக்கிறது. ஆகஸ்ட் 4 அன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மகேஸ்வரி சவுகான் பங்கேற்கிறார். அவர் சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் அரை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் லக்ஷயா சென் பங்கேற்கிறார். அவர் அரை இறுதியில் வெற்றி பெற்றால் பதக்கம் உறுதி ஆகும். தோல்வி அடைந்தால் வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்பார். இவை இரண்டு மட்டுமே ஆகஸ்ட் 4 அன்று இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பாகும்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஒன்பதாவது நாளான ஆகஸ்ட் 4 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் என்னென்ன? என்பது குறித்த முழு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் அட்டவணை -
துப்பாக்கி சுடுதல்
மதியம் 12:30 மணி- விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஆடவர் தகுதி
மதியம் 1:00 மணி- மகேஸ்வரி சவுகான்- பெண்கள் ஸ்கீட் தகுதி நாள் 2
இரவு 7:00 மணி- (தகுதி பெற்றால்) மகேஸ்வரி சவுகான்- பெண்கள் ஸ்கீட் இறுதிப் போட்டி
ஹாக்கி
பிற்பகல் 1:30-இந்திய ஆண்கள் ஹாக்கி vs கிரேட் பிரிட்டன்: ஆண்கள் காலிறுதி
தடகளம்
பிற்பகல் 1:35- பருல் சவுத்ரி: பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1
பிற்பகல் 2:30- ஜெஸ்வின் ஆல்ட்ரின்: ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி
குத்துச்சண்டை
பிற்பகல் 3:02- லோவ்லினா போர்கோஹைன் vs லி கியான்: பெண்கள் 75 கிலோ காலிறுதி
பேட்மிண்டன்
பிற்பகல் 3:30 மணிக்கு பின்- லக்ஷ்யா சென் vs விக்டர் ஆக்சல்சென்- ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி
படகோட்டம்
பிற்பகல் 3:35 மணி- விஷ்ணு சரவணன்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 7 மற்றும் 8
மாலை 6:05 மணி- நேத்ரா குமணன்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 7 மற்றும் 8


Click it and Unblock the Notifications