Olympics 2024 - ஆகஸ்ட் 6 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டி என்னென்ன? நீரஜ் சோப்ரா போட்டி நேரம்?
பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 11வது நாள் போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. இதுவரை இந்தியா வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 6 அன்று மல்யுத்தப் போட்டியில் வெள்ளி அல்லது தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 6 அன்று ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதில் தகுதி பெறும் பட்சத்தில் அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார். இந்தப் போட்டிகள் நடைபெறும் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 11 வது நாள் (ஆகஸ்ட் 6) இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் விவரம் -
மதியம் 1:30 - டேபிள் டென்னிஸ் - ஆடவர் டீம் (சுற்று 16) - இந்தியா vs சீனா
பிற்பகல் 1:50 - தடகளம் - ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று - குரூப் ஏ - கிஷோர் ஜெனா
பிற்பகல் 2:30 - மல்யுத்தம் - மகளிர் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் ரெப்சேஜ் (தகுதி பெற்றால்) - நிஷா தஹியா
பிற்பகல் 2:50 - தடகளம் - மகளிர் 400மீ ரெபெசேஜ் - ஹீட் 1 கிரண் பஹல்
பிற்பகல் 3 - மல்யுத்தம் - மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/8 போட்டி - வினேஷ் போகட்
பிற்பகல் 3:20 - தடகளம் - ஆடவர் ஈட்டி எறிதல் தகுதி - குரூப் ஏ - நீரஜ் சோப்ரா
மாலை 4:20 - மல்யுத்தம் - மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/4 காலிறுதி போட்டி (தகுதி பெற்றால்) - வினேஷ் போகட்
மாலை 6:30 அல்லது இரவு 11:30 - டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதி - இந்தியா vs அமெரிக்கா அல்லது ஜெர்மனி
இரவு 10:25 - மல்யுத்தம் - மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - அரையிறுதி போட்டி (தகுதி பெற்றால்) வினேஷ் போகட்
இரவு 10:30 - ஹாக்கி ஆடவர் அணி அரையிறுதி - இந்தியா vs ஜெர்மனி
நள்ளிரவு 12:20 (ஆகஸ்ட் 7) - மல்யுத்தம் - மகளிர் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் - வெண்கலப் பதக்கப் போட்டி (தகுதி பெற்றால்) -நிஷா தஹியா
நள்ளிரவு 12:45 (ஆகஸ்ட் 7) - மல்யுத்தம் - மகளிர் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் தங்கப் பதக்கப் போட்டி (தகுதி பெற்றால்) நிஷா தஹியா


Click it and Unblock the Notifications