Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Olympics 2024- ஆகஸ்ட் 7 இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் என்னென்ன? பதக்கத்துக்கான போட்டி எவை?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 11 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. ஆகஸ்ட் 7, ஒலிம்பிக் தொடரின் 12வது நாளில் இந்தியா இரண்டு பதக்க வாய்ப்பு உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகட் அரை இறுதியில் பங்கேற்க இருக்கிறார். அதில் வெற்றி பெற்றால் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்பார். அரை இறுதியில் தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார். பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்க உள்ளார். அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள ஒருவர் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.

Olympics 2024 Paris Olympics 2024 2024

அடுத்து கலப்பு அணி மராத்தான் நடைபயிற்சி போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 7 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் அட்டவணை -

காலை 11 மணி - தடகள மராத்தான் பந்தயம் நடைபயிற்சி - கலப்பு ரிலே இறுதி - பிரியங்கா கோஸ்வாமி & சூரஜ் பன்வார்

நண்பகல் 12:30 - கோல்ஃப் பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு - சுற்று 1 - அதிதி அசோக், திக்ஷா தாகர்

பிற்பகல் 1:30 - டேபிள் டென்னிஸ் - பெண்கள் அணி பிரிவு - காலிறுதி - இந்தியா vs ஜெர்மனி

பிற்பகல் 1:35 - தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று - குரூப் பி - சர்வேஷ் குஷாரே

பிற்பகல் 1:55 - தடகளம் - பெண்கள் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று - குரூப் ஏ - அண்ணு ராணி

பிற்பகல் 2:09 - தடகளம் - பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் - முதல் சுற்று - ஹீட் 4 - ஜோதி யார்ராஜி

மாலை 3 மணிக்கு பின் - மல்யுத்தம் - பெண்கள் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/8 போட்டி - ஆன்டிம் பங்கால்

மாலை 4:20 மணிக்கு பின் - மல்யுத்தம் - பெண்கள் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/4 போட்டி (தகுதி பெற்றால்) - ஆன்டிம் பங்கால்

இரவு 10:25க்கு பின் - மல்யுத்தம் - பெண்கள் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் - அரையிறுதி (தகுதி பெற்றால்) - ஆன்டிம் பங்கால்

இரவு 10:45க்கு பின் - தடகளம் - ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தகுதிச் சுற்று - அப்துல்லா அபூபக்கர் (குழு பி), பிரவீன் சித்திரவேல் (குழு ஏ)

இரவு 11:00 - பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ இறுதி - மீராபாய் சானு

நள்ளிரவு 12:45 (ஆகஸ்ட் 8) - மல்யுத்தம் - பெண்கள் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் - தங்கப் பதக்கப் போட்டி - வினேஷ் போகட்

நள்ளிரவு 01.13 (ஆகஸ்ட் 8) - தடகளம் - ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் - அவினாஷ் சேபிள்

Story first published: Tuesday, August 6, 2024, 18:51 [IST]
Other articles published on Aug 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+