For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympics 2024: ஆகஸ்ட் 8 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள்.. நீரஜ் சோப்ரா போட்டி எப்போது?

பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 8 அன்று இந்திய வீரர்கள் விளையாட உள்ள முக்கிய போட்டிகள் என்னவென்று பார்க்கலாம். ஒலிம்பிக் தொடரின் 13 வது நாளான ஆகஸ்ட் 8 அன்று இந்தியாவே எதிர்பார்க்கும் முக்கிய போட்டி ஒன்று நடைபெற உள்ளது.

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். அவர் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Olympics 2024 Paris Olympics 2024 neeraj chopra 2024

இதை தவிர கோல்ஃப், ஓட்டப் பந்தயம், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

2024 ஒலிம்பிக் தொடரில் ஆகஸ்ட் 8 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் விவரம் -

பகல் 12:30 - கோல்ஃப் - பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு - சுற்று 2 - திக்ஷா டாகர்

பிற்பகல் 2:05 - தடகளம் - பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டம் மறுவாய்ப்பு - குழு 1 - ஜோதி யார்ராஜி

பிற்பகல் 2:47 - கோல்ஃப் - பெண்களுக்கான தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 2 - அதிதி அசோக்

மாலை 3 மணி முதல் - மல்யுத்தம் - பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/8 போட்டிகள் - அன்ஷு மாலிக் vs ஹெலன் மரூலிஸ் (அமெரிக்கா)

மாலை 3 மணி முதல் - மல்யுத்தம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/8 போட்டிகள் - அமன் செஹ்ராவத் vs விளாடிமிர் எகோரோவ் (மாசிடோனியா)

மாலை 4:20 மணி முதல் - மல்யுத்தம் - பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/4 போட்டிகள் (தகுதி பெற்றிருந்தால்) - அன்ஷு மாலிக் எதிராக அலினா அகோபியா (உக்ரைன்) அல்லது அன்ஹெலினா லைசாக் (போலந்து)

மாலை 4:20 மணி முதல் - மல்யுத்தம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - 1/4 போட்டிகள் (தகுதி பெற்றிருந்தால்) - அமன் செஹ்ராவத் vs டயமன்டினோ இயூனா ஃபே (பிசுவா-கினியா) அல்லது ஜெலிம்கான் அபகரோவ் (அல்பேனியா)

மாலை 5:30 மணி - ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலப் பதக்கப் போட்டி - இந்தியா vs ஸ்பெயின்

இரவு 9:45க்கு பின் - மல்யுத்தம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - அரையிறுதி (தகுதி இருந்தால்) - அமன் செஹ்ராவத்

இரவு 10:25க்கு பின் - மல்யுத்தம் - பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் - அரையிறுதி (தகுதி இருந்தால்) - அன்ஷு மாலிக்

இரவு 11:55 - தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்று - நீரஜ் சோப்ரா

Story first published: Wednesday, August 7, 2024, 18:55 [IST]
Other articles published on Aug 7, 2024
English summary
Paris Olympics 2024 August 8, Day 13 Indian players match schedule - Neeraj Chopra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+