Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Olympics 2024 - ஆகஸ்ட் 9 அன்று இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதா? என்னென்ன போட்டிகள்?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இதுவரை 13 நாட்கள் முடிந்துள்ளன. இன்னும் மூன்று நாட்களில் ஒலிம்பிக் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் 14 வது நாளான ஆகஸ்ட் 9 அன்று இந்தியா மேலும் பதக்கங்கள் வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா இதுவரை மூன்று வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்று இருக்கிறது. ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை. மற்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.

ஆகஸ்ட் 9 அன்று மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் பங்கேற்க உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற உள்ளது. அதை தவிர்த்து வேறு பதக்கப் போட்டிகள் எதுவும் இல்லை. ஆண்கள் மல்யுத்தம் தவிர்த்து, பெண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், ஆண்கள் 400 மீட்டர் ரிலே ரேஸ், கோல்ஃப் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

Olympics 2024 Paris Olympics 2024 2024

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகள் விவரம் -

நண்பகல் 12:30 - கோல்ஃப் - பெண்கள் தனிப்பட்ட ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 - அதிதி அசோக், திக்ஷா தாகர்

பிற்பகல் 2:22 - தடகளம் - பெண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் - சுற்று 1 குழு 2 - இந்திய அணி (ஜோதிகா ஸ்ரீ தண்டி, எம்.ஆர். பூவம்மா, சுபா வெங்கடேசன் மற்றும் வித்யா ராம்ராஜ்)

பிற்பகல் 2:47 - தடகளம் - ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம் - சுற்று 1 குழு 2 - இந்திய அணி (அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், முகமது அனஸ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் சந்தோஷ் குமார்)

இரவு 11 மணிக்கு பின் - மல்யுத்தம் - ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் வெண்கலப் பதக்கப் போட்டி - அமன் செஹ்ராவத்

Story first published: Thursday, August 8, 2024, 18:44 [IST]
Other articles published on Aug 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+