பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். ஒலிம்பிக் வரலாற்றிலே தொடர்ந்து இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பிவி சிந்துக்கு சொந்தமாகும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளி பதக்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கமும் பிவி சிந்து வென்று இருந்தார். இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஹட்ரிக் பதக்கத்தை பிவி சிந்து பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பிவி சிந்து தற்போது தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்தார். கால் இறுதிக்கு முந்தையச் சுற்றில் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள சீன வீராங்கனை கிங் ஹீ ஜியாவோவை பிவி சிந்து எதிர் கொண்டார். தொடக்கத்தில் இருந்தே பிவி சிந்து தடுமாறிய நிலையில், சீன வீராங்கனை 8க்கு 3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
இதனை அடுத்து அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றாலும் ஒரு கட்டத்தில் பிவி சிந்து 12க்கு 12 என்ற கணக்கில் சமன் செய்தார். இதன் அடுத்து சீன வீராங்கனை அதிரடியாக விளையாடி முதல் செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் கைப்பற்றினார். முதலில் இரண்டாவது செட்டில் பிவி சிந்து இழந்த ஃபார்மை மீட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் அவர் கடுமையாக தடுமாறினார்.
சீன வீராங்கனை 17 புள்ளிகளை எடுத்த போது பிவி சிந்து 10 புள்ளிகள் தான் பெற்றிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது செட்டை சீன வீராங்கனை 21 க்கு 16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் பிவி சிந்து 19க்கு 21 14க்கு 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறி இருக்கிறார்.
இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷ்யா சென் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார். சக நாட்டு வீரரான பிரனாயை வீழ்த்தி 21க்கு 12 ,21 க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஒற்றைப் பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ள மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை லக்ஷயாசனுக்கு கிடைத்திருக்கிறது.