Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக்- ஹாக்கியில் வெறும் 10 பேரை வைத்து இந்தியா வென்றது எப்படி? அநீதிக்கு பிறகு வரலாற்று சம்பவம்

Hockey: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெறும் பத்து வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு காலிறுதியில் பிரிட்டன் அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு சென்று இருக்கிறது. கால் இறுதியில் பிரிட்டனுக்கு இந்தியா கடும் சிம்ம சொப்பனமாக இருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய சரிவை ஹர்மன்பிரித் தலைமையிலான இந்தியா சந்தித்தது. ஹாக்கி போட்டியில் கால்பந்து போலவே நடுவர் சிவப்பு அட்டையை காட்டினால் அந்த வீரர் களத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

Olympics 2024 hockey india hockey team pr sreejesh 2024

அப்படி ஒரு சம்பவம் தான் இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது கால் இறுதியில் முடிவு பெறும் சமயத்தில் இந்திய வீரர் அமீத் ரோகிதாஸ் பந்தை அடிக்கும் போது இங்கிலாந்து வீரரின் முகத்திற்கு நேராக பேட்டை வீசினார் என்று காரணம் காட்டி நடுவர்கள் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கினர்.

இதனால் இந்தியா வெறும் பத்து வீரர்களை மட்டுமே வைத்து விளையாடியது
அமித் ரோகிதாஸ் என்பவர் இந்திய அணியில் தற்காப்பு படையில் மிகவும் முக்கியமானவர். ஒரு முக்கிய சிப்பாயை இழந்த பின் இந்தியா பிரிட்டன் போன்ற எதிரியை வீழ்த்துவது என்பது கனவில் தான் நடக்கும் என பாதி ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்து விட்டு சென்று விட்டார்கள்.

ஆனால் இந்த சரிவை தங்களுக்கு சாதகமாக இந்தியா மாற்றியது. 10 பேர் இருந்தாலும் பிரிட்டனுக்கு நாம் பதிலடி தர வேண்டும் என்ற வெறியில் இந்தியா விளையாடியது. பிரிட்டன் வீரர்களும் அத்துமீறி நடந்து கொண்டனர். ஆனால் அதற்கு எல்லாம் நடுவர்கள் எந்த ஒரு எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.

இதனால் இந்திய வீரர்கள் கடும் கோபத்தில் விளையாடி பிரிட்டன் வீரர்களை கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனை அடுத்து போட்டி பெனால்டி சூட் அவுட்க்கு சென்றது. அதில் ஸ்ரீஜேஷ் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை இரண்டு கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டார். இதனால் இந்தியா 4க்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது. அரையிறுதியில் இந்தியா அர்ஜென்டினா அல்லது ஜெர்மனியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா விளையாடும் அரை இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும். இந்தியா விளையாடும் அரை இறுதி ஆட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும்.

Story first published: Sunday, August 4, 2024, 15:57 [IST]
Other articles published on Aug 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+