Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் பெண்தான்.. இப்ப பேசுங்க பார்ப்போம்.. இமான் கெலிஃப் அதிரடி மாற்றம்.. விமர்சித்தவர்களுக்கு பதிலடி

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலிஃப் ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை வெடித்து இருந்தது. அவர் மருத்துவ ரீதியாக ஆண் என சர்வதேச குத்து சண்டை சம்மேளனம் கடந்த ஆண்டு முடிவு செய்து அவரை தடை செய்து இருந்த நிலையில், ஒலிம்பிக் தொடரில் அவர் போட்டியிட வாய்ப்பு அளித்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா காரினி இவருக்கு எதிரான போட்டியில் பாதியில் விலகியதோடு கெலிஃப்பை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதித்ததை விமர்சித்து இருந்தார். அந்த சம்பவம் உலக அளவில் சர்ச்சையாக வெடித்தது. பின்னர் இதே ஒலிம்பிக் தொடரில் இமான் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.

Olympics 2024 Paris Olympics 2024 2024

அவர் பார்ப்பதற்கு ஆண் போல் இருப்பதாக பலரும் விமர்சித்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போவதாக இமான் கெலிஃப் அறிவித்து அதற்கான நடைமுறையை துவக்கி இருக்கிறார். இந்த நிலையில், அவர் தான் பார்ப்பதற்கு ஆண் போன்ற தோற்றத்தில் இருப்பது தான் உங்கள் பிரச்சனை என்றால் பெண்ணைப் போல மாற்றிக் காட்டுகிறேன் என பிரபல மேக்கப் நிறுவனமான பியூட்டி கோடுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் இமான் கெலிஃப் "மேக்கப்" செய்த பின் ஒரு அழகிய பெண்ணாக காட்சி தருகிறார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. அதிக லைக்குகளை பெற்றுள்ளது. பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர். பார்ப்பதற்கு ஆணைப் போல இருந்ததால்தான் உலக அளவில் பலரும் தன்னை விமர்சித்தார்கள் என நினைத்து அவர் இவ்வாறு செய்திருக்கலாம். தன்னை ஆண் எனக் கூறிய எலான் மஸ்க், ஜே.கே ரௌலிங் போன்ற பிரபலங்களுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 17, 2024, 11:17 [IST]
Other articles published on Aug 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+