இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கம்? ஒலிம்பிக் தொடரில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நீரஜ், மீராபாய்
டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடர் வரும் ஜூன் 26 அன்று தொடங்க உள்ளது. இந்த முறை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் ஒலிம்பிக் தொடரில் பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அதனால், இந்த முறை இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கலாம். ஆனால், தங்கப் பதக்கம் வெல்லுமா?
இரண்டு பேர் இந்திய அணிக்கு நிச்சயமாக தங்கப் பதக்கத்தை வென்று கொடுப்பார்கள் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. அதில் முதல் நபர் பளு தூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு. அவர் கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். இந்த முறை அவர் நிச்சயமாக தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் உலக அளவில் பளு தூக்கும் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

அடுத்து ஈட்டி எறிதல் போட்டியில் உலகிலேயே முன்னணி வீரராக விளங்கும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நிச்சயம் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்று இருந்தார். அதுவே ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் 10வது தங்கப்பதக்கமாக இருந்தது.
அதே போல, மீண்டும் 2024 ஒலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. அவர் கடந்த ஓராண்டில் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சராசரியாக 87 முதல் 89 மீட்டர் வரையிலான தூரத்தில் ஈட்டியை எறிந்து சாதனை படைத்திருக்கிறார். இத்தனை தூரம் தொடர்ந்து வீசுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. நீரஜ் சோப்ரா அந்தத் திறனை பெற்று இருப்பதால் நிச்சயமாக இந்த முறை அவர் தங்கப்பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications