Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Olympics 2024- நாடு திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு கோலாகல வரவேற்பு.. டெல்லியில் உற்சாகம்

டெல்லி: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி நாடு திரும்பியது. அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்-க்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

2024 ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக இந்தியா ஆடியது. அந்தப் போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Olympics 2024 Paris Olympics 2024 2024

மேலும் இந்த வெண்கல பதக்க வெற்றியுடன் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார். அவருக்கு சிறப்பான முறையில் இந்திய ஹாக்கி வீரர்கள் விடை கொடுத்தனர். தற்போது அவர்கள் நாடு திரும்பியதை அடுத்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதை அடுத்து இந்தியாவுக்கு ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இது ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணியின் 13வது பதக்கம் ஆகும். 1980க்கு பின் இந்தியா ஹாக்கியில் பதக்கம் வெல்லாமல் இருந்தது. அதன் பின் நீண்ட காலம் கழித்து 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்து இருந்தது.

தற்போது 2024 ஒலிம்பிக் தொடரிலும் வெண்கலம் வென்று அசத்தி உள்ளது. இதன் மூலம், 52 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்ற சாதனையைம் செய்தது. இதற்கு முன் 1968 மற்றும் 1972 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு முறை பதக்கம் வென்று இருந்தது. அதன் பின் 2021 மற்றும் 2024 ஒலிம்பிக் தொடர்களில் தொடர்ந்து பதக்கம் வென்று உள்ளது.

2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தத்தில் ஒரு வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

Story first published: Saturday, August 10, 2024, 10:32 [IST]
Other articles published on Aug 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+