Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - நீ பெண்ணே கிடையாது! உன்னுடன் சண்டையிட மாட்டேன்.. குத்துச்சண்டையில் விலகிய வீராங்கனை

பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. மகளிருக்கான 66 கிலோ எடை பிரிவு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி, அல்ஜீரியா வீராங்கனை இமன் கலிப்புடன் பல பரிட்சை நடத்தினார்.

வெறும் 46 நொடிகளே இந்த போட்டி நீடித்த நிலையில் திடீரென்று இத்தாலி வீராங்கனை ஏஞ்சிலா இந்த போட்டியில் இருந்து தாம் விலகுவதாக பயிற்சியாளரிடம் அறிவித்துவிட்டு போட்டியை பாதியிலே நிறுத்தினார்.

Olympics 2024 shooting 2024

போட்டி முடிந்தவுடன் அவர் கதறி அழுதார். இது குறித்து புகார் அளித்துள்ள அவர், அல்ஜீரியாவின் இமன் கலிப் ஒரு பெண்ணே கிடையாது என்றும், அவர் ஒரு ஆண் என்றும் புகார் கூறியுள்ளார். அவரின் ஒரு குத்தை கூட என்னால் தாங்க முடியவில்லை என்றும் இது ஒரு ஆணின் குத்து போல தான் இருந்தது என்றும் அவர் சாடியிருக்கிறார்.

மகளிருக்கான போட்டியில் ஒரு ஆணை விளையாட வைத்தது ஏற்க முடியாது என்றும் அவர் குற்றச்சாட்டு இருக்கிறார். இத்தாலி வீராங்கனை இந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு இதே அல்ஜீர்யா வீராங்கனை இமான் கலிப் உலக சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Olympics 2024 shooting 2024

பாலினத்தை அறியும் மருத்துவ தேர்வில் ஆணுக்குரிய டி என் ஏ இமான் கலிபீடம் அதிகமாக இருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியானது. எனினும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமான் கலிபை சோதனை செய்து அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஒலிம்பிக் சம்மேளனத்தின் செய்தி தொடர்பாளர், மகளிர் பிரிவில் போட்டியிடும் அனைவருமே அதற்கான தகுதியை பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.

இதில் எந்த முறைகேடும் இல்லை. இமான் கலிபின் பாஸ்போர்ட்டில் அவர் மகளிர் என்று தான் இருக்கிறது. அவர் மகளிர் என்பதால் தான் இந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தேவையில்லாமல் வெளிநாட்டு ஊடகங்கள் இமான் கலீப் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Thursday, August 1, 2024, 21:41 [IST]
Other articles published on Aug 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+