Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் வரலாற்றிலேயே எந்த வீரரும் செய்யாத மாபெரும் வரலாற்று சாதனை படைத்த அர்ஷத் நதீம்

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து இருக்கிறார். அவர் ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இரண்டு முறை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை வீசி மாபெரும் சாதனை படைத்தார்.

2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

Olympics 2024 Paris Olympics 2024 Javelin Throw 2024

ஒலிம்பிக் வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசி உள்ளனர். நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் என்பவர் 90.57 மீட்டர் தூரம் வீசியதே இதுவரை ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த இறுதிப் போட்டியில் இரண்டு முறை முறியடித்தார் அர்ஷத் நதீம்.

தனது இரண்டாவது முயற்சியில் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனையை உடைத்தார். தனது கடைசி முயற்சியில் 91.79 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இருந்தார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இரண்டு முறை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டி வீசிய வீரர் என்ற சாதனையையும், ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக தூரம் ஈட்டியை வீசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நதீம்.

இந்த போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். ஹர்ஷத் நதீம் சங்கப் பதக்கம் வென்றதன் மூலமாக பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 9, 2024, 7:41 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+