For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympics 2024 July 27: இந்தியா வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் எப்போது நடைபெறும்? முழு அட்டவணை

பாரிஸ்: 2024 பரிசு ஒலிம்பிக் தொடர் ஜூலை 26 (இன்று) இரவு 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. முன்னதாக நடந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வில்வித்தை அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றிருந்தது. அதை தொடர்ந்து முக்கிய போட்டிகள் நாளை (ஜூலை 27) முதல் துவங்க உள்ளன.

அதில் இந்திய வீரர், வீராங்கனைகள் எந்தெந்த போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள் என்பதை முழுமையாக பார்க்கலாம். ஜூலை 27 அன்று துப்பாக்கி சுடுதல், பேட்மிட்டன், படகோட்டுதல் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன் முழு அட்டவணை இதோ -

Olympics 2024 Paris Olympics 2024 2024



துப்பாக்கி சுடுதல்

10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதி (சந்தீப் சிங், அர்ஜுன் பாபுதா, இளவேனில் வாலறிவன், ரமிதா ஜிண்டால்) - மதியம் 12:30

10மீ ஏர் பிஸ்டல் ஆடவர் தகுதி (சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா) – பிற்பகல் 2 மணி

10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்க சுற்றுகள் (தகுதிக்கு உட்பட்டது) - மதியம் 2 மணி

10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி (ரிதம் சங்வான், மனு பேக்கர்) - மாலை 4 மணி முதல்


பேட்மிண்டன்

ஆண்கள் ஒற்றையர் குழு நிலை (எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென்) - பிற்பகல் 12 மணி முதல்

பெண்கள் ஒற்றையர் குழு நிலை (பி.வி. சிந்து) - பிற்பகல் 12 மணி முதல்

ஆண்கள் இரட்டையர் குழு நிலை (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி) - மதியம் 12 மணி முதல்

பெண்கள் இரட்டையர் குழு நிலை (தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா) - மதியம் 12 மணி முதல்


படகோட்டுதல்

ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் ஹீட்ஸ் (பால்ராஜ் பன்வார்) - மதியம் 12:30 மணி முதல்


டென்னிஸ்

முதல் சுற்று ஆட்டங்கள் – ஆண்கள் ஒற்றையர் (சுமித் நாகல்) – பிற்பகல் 3:30 மணி முதல்

ஆண்கள் இரட்டையர் (ரோஹன் போபண்ணா மற்றும் என். ஸ்ரீராம் பாலாஜி) - மாலை 3:30 மணி முதல்


டேபிள் டென்னிஸ்

ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மாணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) ஆரம்ப சுற்று - மாலை 6:30 மணி முதல்


குத்துச்சண்டை

பெண்கள் 54 கிலோ (ப்ரீத்தி பவார்), சுற்று 32 - 7 PM வரை


ஹாக்கி

ஆண்கள் பிரிவு B – இந்தியா vs நியூசிலாந்து – இரவு 9 மணி


2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

இந்தியாவில் பாரீஸ் ஒலிம்பிக் 2024 இன் நேரடி ஒளிபரப்பை மொபைலில் ஜியோ சினிமா ஆப் (JioCinema App) -இல் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரலையில் பார்க்கலாம்

Story first published: Friday, July 26, 2024, 19:24 [IST]
Other articles published on Jul 26, 2024
English summary
Paris Olympics 2024: July 27 - Indian players complete schedule and match timing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+