Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paris Olympics 2024 : இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? துப்பாக்கி சுடுதலில் என்ன பதக்கம்?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா முதல் பதக்கத்தை வென்று இருக்கிறது. துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார்.

எதிர்பார்க்கப்பட்ட மற்ற சில விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதனால், ஏமாற்றம் இருந்த போதும் இந்தியா ஒரு வெண்கல பதக்கத்தை வென்று இருப்பது ஆறுதலாக அமைந்துள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Olympics 2024 Paris Olympics 2024 2024

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் வெண்கல பதக்கத்தை வென்றார். அதன் மூலம், இந்தியா தற்போது ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பான் மற்றும் கொரியா முதல் இடத்தில் உள்ளன.

இந்த இரண்டு நாடுகளும் தலா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று உள்ளன. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்று உள்ளது.

அமெரிக்கா 12 பதக்கங்களை வென்றுள்ள போதும் மூன்று தங்க பதக்கங்களை மட்டுமே வென்று இருப்பதால் நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா இதுவரை மூன்று தங்கம், ஆறு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்று இருக்கிறது. இன்னும் ஒரு தங்கம் வென்றால் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஒலிம்பிக் தொடரை நடத்தி வரும் ஃபிரான்ஸ் மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று மொத்தம் எட்டு பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனா ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த நாடு மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது.

Story first published: Monday, July 29, 2024, 14:32 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+