Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. இந்தியாவுக்கு பெரும் சரிவு ஏன்?

பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. இந்தியா மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது. அமெரிக்கா பதக்க எண்ணிக்கையில் முன்னணியில் இருந்த போதும், அதிக தங்க பதக்கங்களை வெல்லாததால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடரில் கடந்த இரண்டு முறையும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி இருந்தது. இந்த முறையும் அந்த போட்டி தொடர்கிறது. அமெரிக்கா வழக்கம் போல பதக்கங்களை குவித்து வருகிறது. ஆனால், இந்த முறை ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறு நாள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அமெரிக்கா 9 தங்கம், 15 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Olympics 2024 Paris Olympics 2024 2024

மறுபுறம். சீனா 24 பதக்கங்களை மட்டுமே வென்று இருந்த போதும், அதிக தங்க பதக்கங்களை வென்று முதல் இடத்தை பிடித்து உள்ளது. சீனா 11 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. சீனாவை விட அமெரிக்கா அதிக தங்க பதக்கங்களை வென்றால் முதல் இடத்தை பிடிக்கலாம்.

இந்த பதக்கப் பட்டியலில், மூன்றாவது இடத்தில் இந்த ஒலிம்பிக் தொடரை நடத்தும் ஃபிரான்ஸ் உள்ளது. அந்த நாடு 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 27 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் வென்று உள்ளது. ஐந்தாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. அந்த நாடு 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது.

இந்த பதக்க பட்டியலில் இந்தியா 44 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று உள்ளது. ஆனால், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற பல நாடுகள் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு முன் இடம் பெற்றுள்ளன. இந்தியா, வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்றால் மட்டுமே இந்த பதக்கப்பட்டியலில் வேகமாக முன்னேற முடியும்.

Story first published: Friday, August 2, 2024, 12:58 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+