Olympics 2024 பதக்கப் பட்டியல் - 6 பதக்கம் வென்றும் பெரும் சரிவை சந்தித்த இந்தியா.. எந்த இடம்?
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பதக்கப் பட்டியலில் இந்தியா மேலும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஐந்து பதக்கங்களை வென்ற நிலையில் இந்தியா 64 வது இடத்தில் இருந்தது. இன்று மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று, மொத்தம் ஆறு பதக்கங்களை வென்ற நிலையில் இந்தியா 69 வது இடத்துக்கு சரிந்துள்ளது.
அதே சமயம் ஒரே ஒரு தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் தற்போது 58 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறு பதக்கங்களை வென்றும் ஏன் இந்தியா சரிவை சந்தித்துள்ளது? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், இந்தியா தங்கப் பதக்கம் வெல்லாததுதான்.

ஒலிம்பிக் பதக்க பட்டியலை பொறுத்தவரை முதலில் அதிக தங்கப்பதக்கங்கள் வென்ற நாடுகள் வரிசைப்படுத்தப்படும். அதிலும் இரண்டு நாடுகள் ஒரே அளவிலான தங்க பதக்கங்களை வென்று இருந்தால், அந்த இரண்டு நாடுகளில் அதிக வெள்ளிப் பதக்கம் வென்றது யார் என்பதன் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்படும்.
முதலில் தங்கப் பதக்கம், அடுத்து வெள்ளிப் பதக்கம், அதற்கடுத்து வெண்கலப் பதக்க எண்ணிக்கையின் வரிசையில் இந்த தரவரிசை இருக்கும். அதன்படி பார்த்தால் இந்தியா தங்கப் பதக்கம் இல்லாததால் 69 வது இடத்தில் உள்ளது. அதே சமயம் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. தற்போது இந்தியா ஒரு தங்கப்பதக்கம் வென்றால் அதிரடியாக 45 வது இடத்திற்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலம் வென்று மொத்தம் 11 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் வென்று மொத்தம் 83 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் வென்று மொத்தம் 48 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications